பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்55



49. அது பற்றி உங்களுடைய கருத்தைச் சொல்லுங்களேன்.

மணவாளனும் நானும் இதைச் சேர்ந்து பேசியிருக்கிறோம். அதிலே, ஒன்றை மறந்துவிடாதீர்கள் வெஸ்டர்ன் கிரிடிசிஸம் முழுவதும் based on novels and short stories; 'பொயட்ரி ரொம்பக் குறைவு. ஷேக்ஸ்பியர் மாதிரியோ, மில்டன் மாதிரியோ, பொயட்ரி ஒண்ணும் கிடையாது. பிற்காலத்திலே, போப்தான் ட்ரை பண்ணினான். அது மிஸ்ரபிள் பெய்ல்யூர் (miserable failure). ஆகவே, பெரும்பாலும் அவர்களுடைய கிரிடிசிஸம் எல்லாம் நாவல்ஸ், ஷார்ட் ஸ்டோரிகளை பேஸ் பண்ணி வந்தது. அதை அப்படியே 'அப்ளை பண்ண ஆரம்பித்தால் வம்பில மாட்டிக்கிடுவீங்க. இங்கே நமது கவிதைக்குத்தான் பேசுகிறோம். அந்தக் கவிதை has a form of its own. அதனுடைய தொழிலும் வேறே, கடமைகளும் வேறே, உத்திகளும் வேறே. ஆகவே incommunicable. அதாவது சொல்ல முடியாததைப் பாரதி சொன்னானே கேட்கா வரத்தைக் கேட்கத் துணிந்தேன் என்று அதுமாதிரி சொல்ல முடியாததை சொல்றது என்பதுதான். சில உணர்ச்சிகளுக்குச் சொல்லினால் வடிவம் கொடுக்க முடியாது. நம்முடைய இலக்கியத்திலே ஒர் அற்புதமான இடம் இருக்கிறது. சிலப்பதிகாரத்திலே கோவலன் இறந்துவிட்டான் என்பதைச் சொல்ல வருகிறாள் ஒரு தோழி. அவளோ- கடைவீதிக்குப் போனவ. சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அந்நங்கைக்குச் சொல்லாடும் சொல்லாடும்தான் சொல்லாள் . அந் நங்கைக்கு. இதை ட்ரை பண்ணியிருக்கிறார் இளங்கோ. பேச விரும்பல, பேசாமலும் இருக்க முடியல-சொல்லாடாள் நங்கைக்குச் சொல்லாடும் சொல்லாடும் தான். அரையும் குறையுமா கொலைபுரிந்தனரே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/63&oldid=481715" இலிருந்து மீள்விக்கப்பட்டது