பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



59. உடல், பாடல் அப்படீன்னு வருது. உடல் என்பதை physical உடலாகவும் பாடல் என்பதை physical உடம்பி லிருந்து வரும் ஆன்மா- மாதிரி மொழியிலே வந்து அதை narrate பண்ணுகிற மாதிரி வருது. அதுக்குக்கூட இந்த மாதிரி நான்- நீ என்கிற தன்மை சங்க காலத்து இலக்கியத்திலே இருந்தே I and You என்பது வருதுன்னு எழுதியிருக்காங்க. நான் இதை ஒரு rough ஆக சொல்லுகிறேன். அதுவும் முழுக்க அகத்துறைப் பாடல் என்று சொன்னனீங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் வேண்டும்.

அதாவது, இப்ப ஆண்டாள் 1 and You சொல்றாரே, ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. சங்க இலக்கியத்திலே சொல்லுவார்கள். ஓர் உடல் ஈருயிர் என்று. ஏனய்யா ஒரு உடலுக்கு இரண்டு உயிர்? எத்தனையோ பேர் சேர்ந்தாலும் இதற்குப் பதில் சொல்ல முடியாது.

மாணிக்க வாசகர் சொல்கிறார். அந்தப் பதிலை இந்தக் காலத்திலே படிக்கிறவர்கள் அதையெல்லாம் படிக்கிறது கிடையாது. முன்னால படிச்சவர்கள் அதைக் கேள்வி கேட்டா நரகத்துக்குப் போவேன்னு சொல்லிட்டாங்க. அப்போது அவனை இந்தக் கேள்வி ஒரு இது பண்ணிடுச்சி..... ஓருயிர் இருக்கும்போது ஈருடல் எதுக்காக- அப்படியென்று ஒரு கேள்வி கேட்டா இப்போது அமிழ்தம்-னு ஒன்று இருக்கு. சுவைக்குப் பேர் போனது. எல்லோரும் அமிழ்தத்தைச் சாப்பிட்டுவிட்டு நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ஆனா, அந்த அமிழ் தத்துக்குத் தன்னைத் தான் சாப்பிட்டுக் கொள்ள முடியாது. புரியாது. very difficult. ஜாக்கிரதையாக follow பண்ணனும். அமிழ்தம் தன்னை உண்டவர்கள் அனைவரும் சுவை - சுவை-னு சொன்னாங்க. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/70&oldid=481106" இலிருந்து மீள்விக்கப்பட்டது