பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்65



அவனுக்கும்-அவளுக்கும் வேறுபாடு கிடையாது. இவன் ஆம்பளையா இருந்தாலும், எப்படி இருந்தாலும் இவன் பெண்தான். இந்த ஆன்மாக்களுக்கு ஒரே ஒரு புருஷன்தான் உண்டு. அதனால்தான் புருஷோத்தமன் என்று சொன்னோம். ஆகவே, அவனை அனுபவிப்பதற்கு ஆணுக்கும் உரிமையுண்டு. பெண்ணுக்கும் உரிமை உண்டு.

வாயுந் திரைஉகளும் கானல் மடநாராய்

ஆயும் அமருலகும் துஞ்சிலும்நீ துஞ்சாயால்

நோயும் பயலைமையும் மீதுர் எம்மேபோல்

நீயும் திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயோ!

இது பராங்குச நாயகியாகிய நம்மாழ்வார் பாடியது. இங்கே ஆண் ஏது, பெண் ஏது? நம்மாழ்வாரே பெண்ணாகிப் பெருமாளிடம் தூது அனுப்புவாரு.. அடேங்கப்பா. நம்மாழ்வார் படித்தீர்களானால் பெரியாழ்வார் கூடக் கொஞ்சம் பின்னால வந்துவிடுவார்; அந்த மாதிரி ஒரு அற்புதம். இப்ப இந்த வியாக்யான கர்த்தாக்கள், பிரிச்சு பிரிச்சு பீஸ் பீஸா எடுத்தாங்களே தவிர, புதுசா அந்தப் பாட்டை வைத்துக் கொண்டு. இந்த நூல்களை அனுபவிக்கணும்னா அதனுடைய பேஸ் தெரிஞ்சிக்கிட்டு தான் அதை அனுபவிக்கணும்.

65. உதாரணத்துக்குச் சொன்னிங்க- அமைப்பியல், பின்னமைப்பியல், இந்த மாதிரி விஷயங்களை வந்து அப்ளை பண்ணனும்னா ரொம்ப ஜாக்கிரதையாப் பண்ணனும்ணு. எதை மனத்திலே வைத்துக் கொண்டு இதையெல்லாம் அப்ளை பண்ணிப் பார்க்கனும்னு சொல்றீங்க?

அதுதான் முதல்நாளே உங்களைக் கேட்டேன்.

அ.ச.ஞா.ப-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/73&oldid=481721" இலிருந்து மீள்விக்கப்பட்டது