பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



உங்களுக்கு இலக்கிய பேஸ் உண்டா என்று. நீங்க வேறு துறையில இருக்கீங்க. அந்த இலக்கிய பேஸ் இருந்தாத்தான் இதைப் பண்ண முடியும். ஏன் என்றால் இந்த உணர்ச்சி, இந்த அமைப்பு முறையே வேறு. It has nothing to do with even Sanskrit, ஒன்றும் பண்ணல. இந்த வளர்ச்சியே தனி. உண்மையா அதனுடைய வளர்ச்சிக்கு யாரும் கவலைப்படவில்லை. உரை எழுதியவர்கள் அதிலேயே ஈடுபட்டாங்க. அதனால அப்ஜக்டிவ்'வா பார்க்கிற பழக்கம் போய்விட்டது. வெள்ளைக்காரனுடைய 'கிரிடிசிஸத்ததைப் படிச்சதுக்குப் பிறகுதான், அப்ஜக்டிவ்வா. பார்க்கிற எண்ணத்தை உண்டாக்கினேன்.

நான் சரவண முதலியார் மகன்தானே, தினமும் பெரிய புராணத்தைப் படிச்சவன்தான். பெரிய புராணம் ஆய்வு எழுதும்போது என்னுடைய பக்தியையெல்லாம் இங்கேயே மூட்டை கட்டி வைச்சிட்டுத்தான் நான் காஞ்சிபுரம் போவேன். (குறிப்பு:தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் காஞ்சிபுரம் மையத்தில் அ.சஞ7. பெரிய புராண ஆராய்ச்சி மேற்கொண்டு பெரிய புராணம் ஒர் ஆய்வு என்ற நூலை உருவாக்கினார்) அங்க சேக்கிழாரை பீஸ் பீஸா எடுத்துப் புடுவேன். அப்ப அந்த மாதிரி அப்ஜக்டிவ்வா பார்க்கிறதுங்கிற பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டால். நீங்கள் அனுபவிக்க முடியும்.

66. அதுதான் அப்ஜெக்டிவ் கிரிடிசிஸம்’னு சொல்லுங்க... அதாவது தன்னைப் பிரிச்சு எடுத்துடனும்.

67. அப்ஜெக்டிவ் அனாலிசிஸ்.

ஆமாம், Either you are a Catholic or a Protestant. Otherwise you are an agnostic. எதிலேயும் நம்பிக்கை இல்லாதவன். இப்ப என்ன தான் இருந்தாலும் அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/74&oldid=481864" இலிருந்து மீள்விக்கப்பட்டது