பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்67



பிரிக்க முடியாதுங்க. அதை நான் பார்க்கிறேன். இவ்வளவு சமத்துவம் பண்ணி என்ன பண்ணினாலும் வெடுக்குன்னு உட்கார்ந்தா எனக்கு 'நமச்சிவாய'- தான் பண்ண முடியுது. நமோ நாராயணாயப் பண்ண முடியல. அது தெரியுது. இதே பவர் அதுக்கும் உண்டு என்று. மந்திரங்கள் என்றால் என்ன என்று ஒரு நூலையே எழுதியிருக்கேன். சயின்டிபிகா frequency ஐ வைச்சு இந்தச் சொற்களையெல்லாம் என்ன frequency-ல்u compile பண்ணினாங்க, எதனால் மந்திரமாச்சு- நமச்சிவாயனு சொன்ன அது சாதாரண வார்த்தைதானே. இது எப்படி மந்திரமாச்சு? அதான் charged batteries எல்லாம் வைச்சு உதாரணம் காட்டி கம்ப்ளிட்டா Physics— ஐ வைத்து எழுதியிருக்கேன். அதுலேயிருந்து எடுத்து, சயின்டிபிகா பண்ணியிருக்கிறதுனால, அதை தினமணியில பல நாட்கள் போட்டுவிட்டனர். ஆனா இவ்வளவெல்லாம் எழுதுன எனக்கு Personalலா வரும்பொழுது நம சிவாயன்னுதான் வருது. அது ஒன்றும் பண்ண முடியாது.

68. இப்ப உதாரணத்திற்குச் சொன்னிங்க. இந்தத் தமிழ் எழுத்துக்குரிய இலக்கியம், தமிழ்ல மரபு வழியா வருகிற டாலண்ட், மரபு கையளித்த ஒரு இலக்கியச் செல்வமாகும். இவை அத்தனைக்கும் நீங்க இவ்வளவு ஆய்ந்து வந்துருக்கீங்க. இதுல தமிழ்க்குனு ஒரு அணுகல் முறை இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா?

கண்டிப்பா இருக்கு.

69. என்ன அதனுடைய பிரத்யேகத் தன்மைன்னு நினைக் கிறீங்க?

அதாவது வாழ்க்கை முறை இயற்கையோடும், பரம் பொருளோடும் இணைத்துக்கொண்டதாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/75&oldid=481865" இலிருந்து மீள்விக்கப்பட்டது