68■பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்
அதனால்தான் task work poetry-னு தமிழ்ல கிடையாது. இயற்கையைத் தனியாக அனுபவிக்கிறதென்பது கிடையாது. இயற்கையே இறைவனுடைய வடிவம் என்று கருதினர்.
வம்பார் குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
என்கிறார் ஞானசம்பந்தர். இது குற்றால மலையப் பத்திச் சொன்னதா உரை எழுதியிருக்காங்க இல்லை அவருக்கு மலையேதான் ஆண்டவன்.
70. பச்சைமாமலைபோல் மேனி...
அது உதாரணம், உவமை. இங்கு அது உவமை இல்லை. அதுவேதான். ஆக அதுக்கு ஒரு உதாரணம் சொல்லுகிறார் குருபரம்பரை ஆசிரியர். சிறீரங்கத்திலே உலோகசாரங்கர் என்று ஒரு பட்டர். ரொம்ப பக்தர். இறைவனுக்குத் தினசரி அபிஷேகம் பண்ணுகிறவர். ஒருநாள் பெருமாள் சொன்னார். அடே லோகசாரங்கா! காவிரியாற்றின் எதிர்க்கரையிலே ஒருத்தன் என்னைப் பாடிக்கிட்டு இருக்கிறான். அவனைத் தூக்கித் தோளிலே வைச்சுக்கிட்டு வா' என்று.
இதை ஒரு வைஷ்ணவ கான்பரன்ஸில் சிறீநிவாச ராகவன் தலைவர், நான் சொன்னேன், நான் சைவன், எனக்கு வைஷ்ணவ சம்பிரதாயம் தெரியாது. சொன்னதுல ஏதும் தப்பா இருந்தா, மன்னிச்சுக்குங்க. குண்டுக் கட்டை மாதிரி நிக்கிறானே அவனை எதுக்கு தோள்ல தூக்கிக்கிட்டு வரணும்? நொண்டியா, இல்ல. அப்படி யிருந்தா வேணும்னா தோளில தூக்கிட்டு வரலாம். இருந்தாலும் தோள்ல வைச்சுட்டு வந்தார். பெருமாளே. இயம்பிய வாக்கானதால் இப்ப பெருமாள்கிட்டக் கொண்டு வந்து நிறுத்தினான்.