பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



81. பாடுதல்ல தனியா திராவிடர் இலக்கியம், திராவிடர் மொழி...

அது உண்மை, அதை மறுக்க முடியாது. ஏன் என்றால், இது வேற மொழி இது வேற மொழி அதை மறுக்கவே முடியாது. ஆனால் இந்த இரண்டும் கலந்தது என்பது தொல்காப்பியன் காலத்திற்கு முன்னாலேயே வந்தாச்சு.

82. சமஸ்கிருதம் கலந்ததுனால, தமிழுக்கு...

இப்போது ஒன்ற வாங்கிட்டுப் போனிங்களே, அதைப் படிச்சுப் பார்த்தாத் தெரியும். வேத காலம் என்று சொல்வது, உலகம் எல்லாம் பரவினது என்று சொல்வதெல்லாம் fraud என்று எழுதியிருக்கிறேன். வேதம் என்று நாம் குறிப்பிடுவது அந்தப் பஞ்சாப், ஹரியானவில் இருந்ததுதான். தமிழ்நாட்டில் வைதிகம் வைஷ்ணவம். கிழக்கே, சாக்தம், பெளத்தம், சமணம்- இது இப்படி வந்தது ஈஸ்ட்கோஸ்டோட, அது வெஸ்டர்ன் கோஸ்டோட வந்தது. நம்மவனுடைய ஒரு பெரிய சிறப்பு என்ன வென்றால், கதவு எப்பவும் திறந்தே வைத்திருப்பான். எவன் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம். ஏமாந்தவன் என்று ஒரு காலத்திலே நான் நினைச்சேன். இன்றைக்கு அவ்வாறு இல்லை. தன் மேலே உள்ள தைரியம். இப்ப அரசியல்ல எப்படி யென்றால் நான் வந்து முட்டாள். அதிர்ஷ்டவசமாகப் பேர் வாங்கிட்டேன். பெரிய மனுஷனாயிட்டேன். நான் புரபஸராக ஆனவுடனேயே அறிவாளியை எனக்குக் கீழே எடுக்க மாட்டேன். எனக்குக் கீழ் என்னைவிட முட்டாளாகப் பார்த்து உட்கார வைத்துவிடுவேன் இன்றைக்கும் பார்க்கலாம். ஏன்னா அவன் என்னைவிட அறிவாளியா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/84&oldid=481874" இலிருந்து மீள்விக்கப்பட்டது