பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்■77
'பிரைட்டா இருந்தா, உலகமெல்லாம், என்னாய்யா அவன் அசிஸ்டென்டா இருக்கான்னு சொன்னா என் கதி என்னா ஆகிறது. ஆக I will choose an idiot. அப்பத்தான் நான் 'ஷைன் பண்ண முடியும். இதே கதைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அப்போது தமிழனுக்கு நம்பிக்கை இருந்தது. ‘என்னை ஒன்றும் பண்ணமுடியாது. என்னுடைய கல்ச்சர் அவ்வளவு ஆழமானது. எவன் வந்தால் எனக்கென்ன என்றபடி
83. வடமொழிக்கும் தமிழுக்கும் ஏற்பட்ட பரிவர்த்தனையிலே தமிழுக்கு நன்மைதான் நடந்திருக்குனு நினைக் கிறீங்களா? இங்கே நன்மை தீமை...
84. இல்லை, பலம் பெற்றிருக்கு என்று நினைக்கிறீர்களா?
அதுல சந்தேகமே இல்லை. அதுமாதிரி நம்மாளால வடமொழியும் வளர்ந்திருக்கு. அது டபிள் ரிப்லக்ஷன் தியரினு லிட்டரரி கிரிட்டிசிஸத்துல ஒன்னு உண்டு. வான்மீகம் வந்து தமிழகத்தில பரவி தமிழகத்தில முறைப்பாடுகளைப் பெற்றுத் திருப்பி போகுது. அதாவது வால்மீகி ராமாயணத்துல ஒரு ஜாதகம் குறிக்கணும், யாருக்கு? இராமர் லஷ்மணருக்கு. இதப் படிச்சிக்கிட்டு இருந்தேன். எனக்கு ஜோசியம் தெரியும். ஒரு தப்புக் கண்டுபிடிச்சுட்டேன். அதாவது இராமன் ஆயில்யத்தில் பிறந்தான். பரதன் வந்து மகத்துல பிறந்தான். பூரத்துல இலக்குவன் பிறந்தான், உத்தரத்துல இன்னொருத்தன் பிறந்தான்- இப்படிக் கம்பன் பாடுறான். வால்மீகியில என்ன பண்ணிட்டான், இதக் காப்பியடிச்சவன் சரியா அடிக்கல. ஆயில்யம், மகத்த எடுத்துட்டு, ராமன் பிறந்தான், பரதன் பிறந்தானுட்டு, அடுத்து பூரத்துல