78■பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்
இரண்டு பேரும் பிறந்தான். ஏன்னா, இரட்டைப் பிள்ளைன்னு பண்ணிட்டான். புரியுதா?
இதுல இருக்கிற பேசிக் தவறு என்ன என்று இவனுக்குத் தெரியாது. காப்பியடிச்சானே தவிர, பேஸ் ஒர்க்ல பண்ணிட்டான். ஆனால் ஒரே ராசியில பிறந்தான் என்றால், 14 வருஷம் ஒருத்தன் (இலக்குவன்) காட்டுல இருக்கான். இன்னொருத்தன் சத்துருக்கன் நாட்டுல இருக்கான். அது முட்டாள்தனம். ஒரே ராசியா இருந்தா ஒருத்தன் 14 வருஷம் அங்கேயும், ஒருத்தன் 14 வருஷம் இங்கேயும் இருக்க முடியாது. அவன் ராசி வேறு, இவன் ராசி வேறு. கம்பன் பாடுகிறான் ஜாக்கிரதையா. ஆக இது புரியாதபடி டிரான்ஸ்லேஷன் பண்ணி எழுதியிருக்கான். இதுதான் டபுள் ரிப்லக்ஷன் (double reflection) என்று பேரு. அங்கே இருந்து இங்க வந்து ஏதாவது மாறுதலைப் பெற்று மறுபடியும் அங்கே போகும்.
85. உதாரணத்துக்கு அய்யா, உமறுப்புலவருடைய சீறாப் புராணத்தில் வந்து தடாகத்துல வந்து.... அது தமிழில் வந்து...
அது திருநெல்வேலிச் சீமையை வைத்துக்கொண்டு தான் அவர் அரேபியாவைப் பாடுறாரு.
86. தேம்பாவணியும் இந்த தன்மைதானா...
அந்தத் தன்மை வரத்தான் செய்யும். இவர்களுக்கு அதில் வந்த ஈடுபாடு காரணமாக வந்தது.
87. ஆனால், அது தமிழ்க் காப்பியம்தான், இல்லையா?
ஆமாம், அதை யாரும் மறுக்க முடியாது. அரேபி யாங்கிறது ஒரு கற்பனை நாடுன்னு நினைத்துவிட்டுப் போங்களேன்.