பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



89. பகீரதன் ஒரு இதுல சொல்லிருக்காரு... தேம்பாவணி எழுதன. இவர்தான் தமிழைக் கெடுத்தாரு. அப்படீன்னு எழுதியிருக்காரு. அத நீங்க ஒத்துக்கிறீங்களா? வீரமாமுனிவர் தமிழைக் கெடுத்தார்னும் எழுதி யிருக்காரு...

ஒன்ன கெடுத்தாருன்னா எப்படி? பொத்தான் பொதுவாக சொன்னா.. .

90. சில வார்த்தைகளை அவர் மாத்தினாரு...

மாத்தினானா, அது லத்தீன் நேம் (LatinName) வேறே எப்படிப் பண்ணுவான்.

91. அவர் தமிழ் எழுதும் முறையிலேயே வந்து சில வார்த்தை களை மாத்துனாரு...

நீங்க அப்படி பார்க்கப் போனீர்களானால், முதல் குற்றவாளி நம் அருணகிரிநாதர். வடசொற்களைச் சேர்த்துப் போடும்போது அப்படித்தான் ஆகும். அதில் தவறு ஒன்றும் இல்லை. வட எழுத்து ஒரீஇன்னு சொன்னானே தவிர, வட எழுத்து கொண்டாந்தானா வடஎழுத்து ஒரீஇ லக்ஷ்மணன் இருக்குதுல்ல, தவறிப் போய்க்கூட லக்ஷ்மணன் என்று எழுதமாட்டான், கம்பன். இலக்குவன்னுதான் எழுதுவான். அதுமாதிரி பண்னிட்டுப் போங்க. விருபாக்ஷன்னு ஒருவன் வருகிறான். விருபாக்கன்னு எழுதுவான். அத வேறு ஒன்றும் பண்ண முடியாது. (விலங்கு நாட்டத்தன் என்பான் பின்னர்)

92. அடுத்தது முக்கியமானது ஒன்னு கேட்கணும்னு. அய்யா. இவ்வளவு காலத்திலே இலக்கிய சம்பந்தமாகவே உங்களுடைய வாழ்க்கை அமைச்சுக்கிட்டு இருக்கீங்க. எல்லாவற்றுக்கும் மீறி யுனிவர்சலா இலக்கியம் என்பதற்கு ஒரு தனியான மதிப்பீடு, வால்யூ லைப்ல இருக்குங்களா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/88&oldid=481878" இலிருந்து மீள்விக்கப்பட்டது