பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



அறிஞ்சுக்கிடணும். அந்த இலக்கியம்கிறது, மொழி வழியாகத்தான் வருகிறது. அப்ப, மொழி என்பது மிக முக்கியமானது ஒரு இனத்துக்கு. அப்படின்னா அந்த மொழி வழியாகத்தான் அந்த இன வரலாற்றைக் கண்டுபிடிக்க முடியுமென்ற நோக்குல நீங்க பெரிய புராணத்தைப் பார்த்தீங்களா?

பெரிய புராணமாகட்டும், சின்ன புராணமாகட்டும், ஒரு இலக்கியம் மொழி வழியாகத்தானே வர முடியும்? கம்யூனிகேஷன் அதுதானே? ஆமாம் அதில் என்ன சிறப்பு.


96. லிங்குவிஸ்டிக் ஆஸ்பெக்ட்-னு சொல்றது. அதுதான். தமிழ்ல வந்து உதாரணத்திற்கு...

Each has its own linquistic aspect,இப்ப சின்ன ஒரு உதாரணம் சொல்றேன். ஷேக்ஸ்பியர்ல- ரிச்சர்டு த செகண்ட் என்பதில். ஒரு இது வரும். a horse, a horse, a kingdom for a horse.’ ஒரு குதிரை விழுந்து செத்துப் போச்சு- என்னுடைய இராஜ்யத்தையே கொடுக்கிறேன் ஒரு குதிரைக்கு. A kingdom for a horse And they brought a horse. What a noble steed was. – இது ஷேக்ஸ்பியர்.இப்ப அவன் என்ன சொல்றான். ஹார்ஸ்-னாலும், ஸ்டீட்னாலும் அர்த்தம் ஒன்றுதான், குதிரை. ஆனால் and they brought a horse and what a noble horse it wasனா குட்டிச்சுவர், பொயட்ரி போச்சு. குதிரை ஒன்றுதான், கிண்டியில் ஒடுவதும் குதிரைதான். ஜட்காவுல ஒடுவதும் குதிரைதான். இந்தக் குதிரை கிண்டியில ஒடும்போது... அந்தக் குதிரைக்கு மதிப்பே வேறு மாதிரியாகப் போயிருது. பல லட்சங்களுக்கு உரிய பொருளாகுது. இது பல நூறுகளிலே ஒரு குதிரையா இருக்கும். குதிரை என்கிற பொதுப் பெயரினாலே குறிக்கப்பட்டாலும், கிண்டி சம்பந்தப்படும் போது அதோட மதிப்பே வேறு. அது மாதிரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/90&oldid=481719" இலிருந்து மீள்விக்கப்பட்டது