பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



இல்லை. பிறமொழியைக் கற்காததனால் நாம் அடைந்திருக்கும் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல. ரொம்ப இழந்து விட்டோம்.

104.புதுமைப்பித்தனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

கேளுங்க... அது என்ன ஆயிப்போச்சு. என்ன தேடியும் இரண்டு கலைமகள் மலர்கள் அகப்படாமல் போச்சு. சிறுகதையைப் பத்தி எழுதிக்கிட்டு இருக்கும் போது ஒரு தடவை ஒன்றரைப் பக்கம்- அது. பொது மக்களிடத்தில் அதை எடுத்து கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்று டிஸ்கஸ் பண்ணியிருக்கேன். அவன் எப்படிப்பட்டவன் என்கிறதையும் எழுதியிருக்கேன். கு.ப. ராஜகோபாலன், மற்றப்படி எப்படியிருந்தாலும் புதுமைப் பித்தன் பக்கத்துல போக முடியாதுன்னு எழுதிப்புட்டேன். அது பிரிண்ட் ஆகிவிட்டது. அதில் ஒண்னும் சந்தேகமில்லை. ஆனால் புஸ்தகம் போடுகிற காலத்தில... என் கிட்ட ஒரிஜினலே கிடையாது எங்கிட்ட நான் எழுதுன புத்தகத்துக்கு- குறள் கண்ட வாழ்வு-னு ஆனந்த விகடனுக்காக எழுதினேன். வாசன் வீடு தேடி வந்து சொல்லி, இதை எழுதியிருக்கேன். என்னை மாற்றின பெருமை வாசனுக்கு உண்டு-னு. அதுக்கு முன்னாடி கடாபுடானு எழுதியிருக்கேன். அவர்தான் வந்து, 'மக்களுக்காக எழுதுறிங்க, நீங்க, சொற்பொழிவு பண்ணுறாப்புல அவங்க இதுக்கு உணர னும்னு பண்ணு றீங்களோ அதுமாதிரி பண்ணனும்-னு, அதில் இருந்து மாறினேன். அந்தப் புஸ்தகம் கிடையாது. கடைசியில என்ன ஆயிற்று? இராஜபாளையம் லைப்ரேரியில போய், அந்த லைப்ரரியன்கிட்ட கேட்டு, அய்யா பிரிண்ட் பண்ணுனதும் இரண்டு காப்பியா கொண்டு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/94&oldid=481027" இலிருந்து மீள்விக்கப்பட்டது