பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



108. மெளனியோட கதைகளைப் படிச்சிருக்கீங்களாய்யா, ஏதாவது...

நினைவுல நிக்கிற மாதிரி ஏதுமில்ல புதுமைப் பித்தனுக்கு நான் இன்னொன்று பண்ணினேன். என்னுடைய compliment-ஐ எப்படி pay பண்ணினேன் என்றால், அகலிகை மீண்டும் கல்லானாள்-னு ஒரு கதை அதை டிராமாவாப் போட்டேன்.

109. சாப விமோசனம்...

ஆமாம்.

அத டிராமாவாப் பண்ணச் சொன்னேன். அவ்வளவு ஈடுபாடு எனக்கு. அந்த மாதிரி ஒரு இமாஜினேஷன் எனககு. அபபT...

110. மொழி வளம்...

கருத்து வளம், மொழி வளம் இல்லைய்யா, என்ன மொழி தெரியும். அவன் எப்படி இமாஜினேசன் பண்ணுவான்.

111. அகலிகை மீண்டும் கல்லானாள்... ஆமாம். 67ல் டாக்டர் தியாகராஜன் கிட்ட சர்ட்டிபி கேட் வாங்கப் போனேன். நான்தான் கார் ஒட்டிக் கொண்டு போனேன். பெரிய பையன் மெய்கண்டான் கூட இருந்தான். வண்டியில் ஒக்காந்துகிட்டு, ’போடா நீ போய் வாங்கிட்டு வாடா, அம்மாவ அழைச்சிட்டுப் போய்’ என்றேன். தியாகராஜன் யாருன்னு தெரியுதா? அதான்யா அரசங்குடி ஊருக்குப் பெருமையைத் தேடிக்கொடுத்த ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் தான்யா.

112. ஒ. ஒ. தியானேஸ்வரனா?... அவனுடைய மாமனும் நானும் ஒன்றாகவே வளந்த வங்க. நாங்க முதலியார். ஊரிலே நாங்க ஒரே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/96&oldid=481113" இலிருந்து மீள்விக்கப்பட்டது