பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்89



குடும்பந்தான் முதலியார், பாக்கி எல்லாரும் கள்ளர். அத்தனை பேரும் முறை அண்ணன் தம்பி முறை, மாமன் மச்சான் முறை. 'போய் வாங்கிட்டு வாடா"ன்னு சொன்னேன். அப்போது, யாரோ ஒருத்தரு என்னுடைய பேர் சொன்ன மாதிரி இருந்துச்சு. யார் அப்படீன்னு கார் கதவைத் திறந்து பார்த்தால், கவிஞரும்-மன்னர் மன்னரும் ஆன பாரதிதாசன்! என்ன கவிஞரே எப்படி யிருக்கீங்க. என்று கேட்டேன். ஒன்னும் நிலையில்ல, ஒண்ணும் தாங்காதுபோல இருக்குன்னார். ஏன்யா வாயால இப்படிப் பேசித் தொலையிர? நீ கவிஞன் அய்யா, சொன்னா நடக்கும். அப்படின்னு சொன்னேன். நீ கவிஞனய்யா வாயில்ல அப்படியெல்லாம் வரக் கூடாதுன்னு.. இல்ல நீ எப்பதான் என்னைப்பத்தி ஒரு திறனாய்வு எழுதப் போறேன்னு கேட்டார். கவிஞரே நீ சாகுறத்துக்குள்ள நான் எழுதுறேன். நீ கவலைப்படாதே என்று சொல்லிட்டு உள்ள போய்த் தியாகராஜன்கிட்ட கவிஞர் நிலையை நினைத்து, என்னடான்னு கேட்டேன். அதெல்லாம் ஒன்றுமில்லை, கொஞ்சம் அதிகமாப் போச்சு. வேற ஒண்ணும் கவலைப்படுவதற்கு ஒண்ணு மில்லை’ என்று சொல்லிட்டான். அதை நான் நம்பிட்டேன். வேலை முடிஞ்சு போச்சு, ஒரு மாசத்துல செத்துப் போயிட்டாரு. எனக்கு மன்னிக்க முடியாத ஒரு வருத்தம், இவர் கேட்டதைப் பண்ண முடியலேன்னு. நாமா எழுதல. அப்ப நான் டைரக்டரா இருக்கேன். அது அரசாங்க வேலை. 360 புஸ்தகங்கள் கொண்டு வந்திருக்கிேன். தமிழில் இன்னைக்கி உலகத்திலே எந்த சப்ஜெக்டும் கொண்டுவராத சப்ஜெக்டே இல்ல. 360 புஸ்தகத்தை 11 வருஷத்தில போட்டுருக்கேன். அதுலதான் இத விட்டுட்டேனா? மதுரையிலிருந்து இரண்டு கவிஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/97&oldid=481638" இலிருந்து மீள்விக்கப்பட்டது