இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
- "கண்வழி புகுத்து கருத்தினில் கலந்த
- மின்னொளியே ஏன் மௌனம்?
- வேறெதிலே உந்தன் கவனம்?"
- "மாசிலா உண்மைக் காதலே!
- மாறுமோ செல்வம் வந்த போதிலே!"
- "தென்றல் உறங்கிய போதும்
- திங்கள் உறங்கிய போதும்
- கண்கள் உறங்கிடுமா? - காதல்
- கண்கள் உறங்கிடுமா?"
- "இதுதான் உலகமடா! - மனிதா
- இதுதான் உலகமடா! - பொருள்
- இருந்தால் வந்து கூடும்! - அதை
- இழந்தால் விலகி ஓடும்!"
- "ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!
- வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே"
என்று இப்படி எண்ணற்ற பாடல்களை என் இதயத்தேரில் ஏற்றி, ஊர்வலம் வந்த அந்த நாட்களை இன்று நினைத்தாலும் என் நெஞ்சில் இனிமை சுரக்கிறது.
- "மணப்பாறை மாடு கட்டி
- மாயவரம் ஏரு பூட்டி
- வயல் காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு!-பசுந்
- தழையைப் போட்டு பாடுபடு செல்லக்கண்ணு"
போன்ற பாடலும்,
- "ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லே!
- என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே!"
- "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!
- தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்!"