10
தமிழுலகம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி "குருவிக் கரம்பை சண்முகம் தன் பள்ளிப் பருவத்தில் எவருடைய திரையிசைப் பாடல்களை அதிகமாக ரசித்தானோ, அவருடைய பாடல்களைத்தான்; ஆம்! கவிஞர் மருதகாசியின் பாடல்களைத்தான் பிற்காலத்தில் தனது மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்ய வைத்தான்!” என்பதுதான்.
கவிஞர் மருதகாசி திரையிசைப்பாடல் உலகின் கம்பர்.
வயல்களையும் பேச வைத்தவர்.
ஏர்களையும் பாட வைத்தவர்.
"வாராய்! நீ வாராய்!" என இசையுலகை நோக்கி நம்மை அழைத்தவர்! தென்றல் காற்றில் நம்மையும் நம் செவிகளையும் உலவ வைத்தவர். "திரைக் கவித்திலகம்" கவிஞர் அ.மருதகாசி இந்நூலைப் புரட்டியபொழுது,
"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே" என்ற பாடலை முணுமுணுத்தவாறே எங்கள் ஊர் ஆற்றங்கரையின் வழியே நான் நடந்துபோன நாட்கள் ஞாபகம் வருகின்றன.
கடந்த காலத்தில் நான் கேட்டு மகிழ்ந்து வளர்ந்த பாடல்கள், இதோ இப்பொழுது, இங்கே ஒரு தொகுப்பாக வந்திருப்பதைக் காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு தமிழனும் பங்கிட்டுக் கொள்வான் என்பது உறுதி.
சென்னை.
இப்படிக்கு
14-12-81. குருவிக்கரம்பை சண்முகம்