பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302



சின்ன மீனைப் போட்டா தான்-பெரிய மீனைப்
புடிக்கலாம்.

சில்லரையை விட்டாத்தான்-பெருந் தொகையை

எடுக்கலாம்.(சின்ன)


கண்ணும் கண்ணும் சேர்ந்தாத்தான்

காதல் பாடம் படிக்கலாம்!
காலம் நேரம் வந்தாத்தான்
காரியத்தை முடிக்கலாம். (சின்ன)


அதட்டிப் பேசும் திறமிருந்தா
எதிரி வாயை அடக்கலாம்!

உருட்டும் புரட்டும் தெரிஞ்சிருந்தா

உலகத்தையே ஏய்க்கலாம்!

குதர்க்க புத்தி இருந்தாத்தான்

குறுக்கு வழியில் போகலாம்!
குள்ள நரி குணமிருந்தா
எதிலும் ஜெயிக்கலாம்- (சின்ன)


வெள்ளை சள்ளை இருந்தாத்தான்
கள்ளத்தனத்தை மறைக்கலாம்!

நல்லவர் போல் நடிச்சாத் தான்

கொள்ளையிட்டுக் குவிக்கலாம்!

பல்லைக் காட்டத் தெரிஞ்சாத்தான்

பக்குவமாப் பொழைக்கலாம்:
கல்லு மனசு படைச் சிருந்தா
அடுத்துக் கெடுக்கலாம்! (சின்ன)


தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை-1959

இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: ஜமுனாராணி