பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு அழகான இடம் வேறில்லை

(ஸ்வீடன் தேசத்தைப் பற்றி)

நமக்கு அழகான இடம் வேறில்லை,
இங்கு நமக்குக் குறையொன்று மில்லை.
விதி நமக்கு எது தரினும் சரி,
நமக்குச் சொந்தமாக உளது இது !
அன்பு செய்ய - ஐச்வரியமாய் மதிக்க -
உலகில் இதைவிட உயர்ந்தது எது ?
நீர்நிலைகள் நிறைந்த நாடு!
பாட்டும் மெய்யும் நிரம்பிய நாடு !
வாழ்வின் அலைகட்கு அஞ்சா நாடு !
எங்கள் தந்தையர் நாடே !
எங்கள் தனையர் நாடே !
வறுமைக்கு நாணற்க !
ஆனந்த சுதந்திரமாய் வாழ்க !

ஜான் லட்விக் ருனிபெக்

44