பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனி மலர்

I

இந்த ஒரு மலரே உண்டு,
அது ஒன்றே மணம் வீசும்,
இதன் அழகிய தோழர் எல்லாம்
வாடி மறைந்து போனார்.
இப்பொழுது பந்து ஒருவரும் இல்லை.
இது சேர்ந்து களிக்கவோ,
இது சிந்தை தேறவோ,
வேறு மலரில்லை, ஒரு முகையுமில்லை.

II


மலரே! நீ மட்டும் செடியில்
ஏங்கி நிற்க வேண்டியதில்லை !
தோழர் எல்லாம் தூங்குவதால்
நீயும் அவரோடு தூங்குவாய்!
உன் தோழர் இறந்து போனார்,
மணம் இழந்து உறங்குகின்றார்,
நீயும் அவரோடு நித்திரை செய்,
தரையில் இலைகளைப் பரப்புவேன் !

47