பக்கம்:ஆண் சிங்கம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


பத்மாவுக்கு அநேக இடங்களில் முயன்று பார்த்தும் நல்ல மாப்பிள்ளையாக யாரும் கிடைக்கவில்லை என்ற செய்தி அவ்வப்போது அவன் காதுகளில் விழுந்தது. அவன் அம்மாவே அதைச் சொல்லுவாள். அப்போதுகூட தன் உள்ளக் கிடக்கையை வெளியிடலாம் என்ற துணிவு ராமலிங்கத்துக்கு வந்ததில்லை. ‘பத்மா எனக்காகத்தான் இருக்கிறாள், உரிய காலம் வந்ததும் நான் இதைச் சொல்லுவேன்’ என்று அவன் பெருமையாக எண்ணுவதுண்டு.

பிறவிப் பெருமாள் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். ‘தம்பிக்கு அதிர்ஷ்ட ஜாதகம். அப்பாவே அடிக்கடி சொல்லுவார்களே. அவன் பாஸ் பண்ணக் கேட்கணுமா?’ என்று அண்ணன் சொல்லி மகிழ்ந்தான். இளையவன் பரீட்சையில் தேறியது மட்டுமல்ல; உறவினர் ஒருவரின் சிபாரிசு மூலம் அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பெரியவன் சத்தோஷம் அடையாமல் இருப்பானா?

பிறவிப்பெருமாள் அண்ணனை விட முற்றிலும் மாறுபட்டவன். நாகரிக மோகமும், மிடுக்கான தோற்றமும், உல்லாசப் போக்கும் கொண்டவன். என்னவே மைனர்!’ என்றுதான் அவனை அறிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். சைக்கிளில் வீதிகளை வளைய வளைய வருவதில் அவனுக்கு உற்சாகம் அதிகம். நல்ல வேளே! அவனுக்கு சீக்கிரமே வேலை கிடைத்துவிட்டது. சும்மா இருந்தால் பையன் கெட்டு அல்லவா போவான்’ என்று கிசுகிசுத்தது அண்ணனின் மனக்குறளி.

‘சீக்கிரமே அவனுக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணிவிட வேணும் என்று பெரியவன் தீர்மானம் செய்து கொண்டான். தனக்குத் தானே தேர்ந்து முடிவு செய்துள்ள பத்மாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லி, முயல்வதற்குரிய வேளை வந்து விட்டது என்றும் அவன் கருதினன்.

தாய் ஆவுடையம்மாளே மகனிடம் அந்தப் பேச்சைத் துவக்கிவிட்டாள். ‘உனக்கும் வயசாயிட்டுது. தம்பிக்கும் ஒரு கலியாணத்தைப் பண்ணி

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/104&oldid=1072866" இலிருந்து மீள்விக்கப்பட்டது