பக்கம்:ஆண் சிங்கம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

கெளளி...கேட்டீகளா? நீங்க இப்படியெல்லாம் பேசப்படாது எசமான்’ என்றான் மாட்சாமி.

‘பல்லி வயித்துக்கில்லாம, பசியினாலே கத்தும் சவம்’ என்றார் பிள்ளை.

மீண்டும், முன்னைவிட பலமாக, பக பக பக்’ என்று சிரித்தது கெளளி. சாலைக்கரையானே விஷமச் சிரிப்பு சிரிப்பது போலிருந்தது.

கெளளிக்கு எதிரொலி கொடுக்காமல் கேட்டுக் கொண்டிருந்தால் தோஷம் எனும் நம்பிக்கையுடைய மாடசாமி நாக்கினுல் வாய்க்குள் டொக் டொக்” என்று அடித்துக் கொண்டான். ஏந்தான் ஐயா இந்தப் போக்கு போறாகளோ, தெரியலே. இது நல்லதுக்கில்லே என்று அவன் உள்ளம் புலம்பியது. ‘அச்சானியத்தை ஒடுக்க த்தா...இத்தாலே என்று கதறவும், காளைகள் வேகமாக ஒடத் தொடங்கின. மணி நாதமும், சக்கரங்களின் கடகடப்பும் அவன் மன அரிப்பை ஒடுக்க உதவின.

இது மத்தியானம் நடந்தது. திடீரென்று ஸ்ரீவைகுண்டத்துக்குக் கிளம்பினார் பிள்ளை. காலையில் புறப்பட்டுப் போய், சாயங்காலமே திரும்பி விடலாம் என்று எண்ணினார். தை அம்மாசையில்லா இன்னிக்கு! அமாசை விரதமும் அதுவுமா...’ என்று வீட்டம்மா இழுக்கவே, ‘ஸேரி, மத்தியானச் சாப்பாட்டுக்கு மேலே போறேனே” என்று ஒத்திப்போட்டார். ‘போய்விட்டு எந்த ராத்திரியானாலும் சரி, வீடு திரும்பிரணும். நாளைக்கு இந்த ஊரிலே முக்கிய சோலியிருக்கு என்றார் அவர். ஸ்ரீவைகுண்டம் சேரும் பொழுது மணி மூன்றாகி விட்டது அவரைப் பார்த்து, இவரைப் பார்த்து, அங்கே காரியம் கவனித்து, இங்கே வம்பளந்து என்று அப்படியும் இப்படியுமாக நேரம் ஓடிவிட்டது. இராச் சாப்பாட்டை முடித்துவிட்டுத் தான் போகணும் என்று நண்பர் கட்டாயப்படுத்தவே, தங்கிவிட்டார். அதிகாலையில் எழுந்து போகலாமே என்ற யோசனையை மறுத்துவிட்டார். அதனால் வண்டி பூட்டவேண்டியதாயிற்று:

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/15&oldid=1071122" இலிருந்து மீள்விக்கப்பட்டது