பக்கம்:ஆண் சிங்கம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

உழைப்பு ஒரு தண்டனை. தண்டனைதான் அவர்கள் வாழ்வு. அவர்களில் ஒருவன்தான் அவனும் – அந்த அறுபத்தைந்தாம் நம்பர் கைதி.

ஒரு நாளைப்போல் ஒரு நாள், என்றும் ஒரே நியதி. எப்போதும் ஒரே இயந்திர இயக்கம். எனினும் அவன் மனதிலே மாறுதல் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அவன் உள்ளத்தில் ஓர் தெளிவு மலர்ந்தது. எண்ணத்தில் புதுமை புஷ்பிக்கத் தொடங்கியது.

தங்கம்கூட வெறும் மண் மாதிரித்தான். மண்ணின் ஆழத்தில், இருளின் குடலிலே பாறைகளின் அழுத்தத் திடையே பிறக்கும் பொருளான இது புழுதியாகச் சிதைவுறுகிறது இங்கே. அதற்கு மதிப்பு கொடுப்பது மனிதன்தான். பின் அதுவே மனிதனை மயக்கி, ஆட்டி வைக்கும் மோகினியாகி விடுகிறது.

அவன் உதற முடியாத அந்த மோகினியின் வலையில் சிக்குண்டு எத்தனை பாபங்கள் செய்திருக்கிருன்! நிறைய நகைகள் அணிந்திருந்த சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏய்ப்புக்காட்டி அழைத்துச் சென்று, நகை களைத் திருடிப் பின் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொன்று உடலைப் பாழ்ங்கிணற்றிலே வீசி எறிந்ததை எண்ணவும் அவன் இதயம் வேதனையுற்றது. எத்தனை வீடுகளில் அவன் கன்னக்கோல் வைத்திருக்கிருன்! எவ் வளவு பெண்களின் காதுகளை அறுத்து அணிகளைப் பிடுங்கியிருக்கிருன்!

அவனை வெறியனாக்கிய தங்கம் பூமிக்கடியில் மண் ணாய் பொடியாய் காலில் மிதிபட்டு அலட்சியப்படுத்தப் படுவதை உணர உணர அவனுக்கு புத்தி குழம்பியது. இந்த அற்ப உலோகத்துக்காக அவன் செய்யாத பாபங் கள் – இழைக்காத அநீதிகள் – உண்டா? தன்னைக் குருடனய், மந்த மதியினனாய், மனிதம் இழந்த வெறிய னாய், வெறி மிகுந்த மிருகமாக மாற்றி வைத்தது அது தானே! அதனால் அவன் கொலை கூட......

அந்தக் கோர நினைவு! பெரும் பணக்காரன் ஒரு வன் வீட்டில் புகுந்தான் அவன். செல்வன் வீட்டில்

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/37&oldid=1071143" இலிருந்து மீள்விக்கப்பட்டது