பக்கம்:ஆண் சிங்கம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

 முடிவில் ஒரு விடை அதற்குக் கிடைத்திருந்தது என்பது பின்னர் புரிந்தது...

‘இரண்டு மணி பஸ்’ ஊர் எல்லையைத் தாண்டி, பெரிய ரஸ்தாவில் திரும்பிய போது ‘கார் நிக்கட்டும்! கார் நிக்கட்டும்! என்று மெல்லிய குரல் ஒன்று எழுந்தது. சிறுகை ஒன்று முன் நீண்டு சைகையும் காட்டியது.

பஸ்ஸின் வேகம் குறைந்தது. கண்டக்டர் எட்டிப் பார்த்து, யாரு வரப்போறாங்க? சீக்கிரம் ஒடி வரச் சொல்லு’ என்று கத்தினான்.

‘காரு நிக்கட்டும்! நான் ஏறணும்! என்று மிடுக்காகக் குரல் கொடுத்தாள் எட்டு வயது வள்ளி அம்மை.

ஒகோ. அதும் அப்படியா!’ என்று சிரிப்புடன் சொன்னான் அவன்.

‘எது எப்படியோ–எனக்குத் தெரியாது. நான் டவுனுக்குப் போகனும், இந்தா நாலரை அணா’ என்று நீட்டினாள் அவள்.

‘சரி சரி முதல்லே ஏறு என்று கூறிய கண்டக்டர், அவள் பக்கம் கைநீட்டி, அவளை பஸ்ஸுக்குள் தூக்கி வைத்தான்.

‘நான்தான் ஏறி வாறேனே. அதுக்குள்ளே நீ ஏன் அவசரப்படுறே?’ என்று வள்ளி அம்மை மூஞ்சியைச் சுளித்தாள்.

கண்டக்டர் கொஞ்சம் தமாஷ் பேர்வழி. ‘கோவிச்சுக்காதிங்க, மேடம், ஸீட்லே உட்காருங்க... எல்லாரும் வழிவிடுங்க, ஸார், பெரிய மனுஷி வாறாங்க” எனறான்.

பொதுவாக அந்நேரத்து பஸ்ஸில் கூட்டம் இராது. அங்கொருவர் இங்கொருவராக ஆறேழு பேர்கள் இருந் தனர். எல்லோரும் வள்ளி அம்மையையே பார்த்துக்

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/55&oldid=1072136" இலிருந்து மீள்விக்கப்பட்டது