பக்கம்:ஆண் சிங்கம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


தொழுவத்தில் நிற்கும். வாசல்படியண்டை வரும். ஒருநாள் திண்ணை மீது கூட ஏறிவிட்டது!

அப்போதெல்லாம் அவர் உடல் பதறும் உள்ளம் நடுங்கும். தெளிவற்ற–காரணம் புரியாத–ஒரு பயம் அவரை ஆட்கொள்ளும். அவர் மிகுந்த பிரயாசையோடு ‘து!’ என்று துப்பமுயன்று, சீ! போ சனியனே!’ என்று சொல்லி முடிப்பார். அது–எருமைக் கன்றுக் குட்டி மாதிரி வளர்ந்துவிட்ட தடிப்பன்றி–நிதானமாக நின்று, மந்தமான–அழுக்குப் படிந்து மங்கிவிட்ட மஞ்சள் நிறக் கண்ணாடி வட்டங்கள் போன்ற–சிறு கண்களால் அவரை வெறித்துப் பார்க்கும்.

அக் கண்கள்... அவற்றை அவர் எங்கே பார்த்திருக் கிறார்?...அவரை என்னென்னவோ செய்யும். அவற்றில் பிறக்கிற ஒளியற்ற ஒளி அவருக்கு அச்சமும் அரு வருப்பும் தரும். அந்தப் பன்றி வாயை விசித்திரமாக இழுத்துச் சுளிக்கும். அது அவ்ரைப் பரிகசிப்பது போலி ருக்கும். அவருக்கு விளக்க முடியாத வெறுப்பும் வேதனையும் எழும்.

ஒருநாள் அந்திக் கருக்கலில்–அவர் பட்டாசாலையில் இருந்த குத்து விளக்கை ஏற்றிவிட்டு, அரிக்கன் லைட்டில் ஒளி ஏற்படுத்தி அதை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்துகொண்டிருந்தார். திண்ணைக்கும் இரண்டாம் கட் டுக்கும் இடையில் உள்ள வாசல்படியில்–கறுப்பாய், உயரமாய் அது என்ன?... அவர் தேகம் நடுங்கியது. ஆமாம். அந்தப் பன்றிதான். ஏனோ அவர் அலறிவிட்டார். தெளிவற்ற ஓலம் தெறித்து விழுந்தது அவர் வாயிலிருந்து. நடுங்கிய கையிலிருந்து நழுவி விழுந்தது விளக்கு. விழுந்த விளக்கின் சிம்னி சிவீர் என்ற ஒலியோடு உடைந்து சிதறியது. ஒளி அவிந்துவிட்டது.

அந்தக்கணத்தில் அவர் அனுபவித்த பயம்–தெளிவற்றது; அளவற்றது: அர்த்தமற்றது. அந்தப் பன்றி வீட்டுக்குள்ளேயே வந்துவிடுமோ என்ற அச்சம், வந்து விட்டதுபோல், தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது போல், அசிங்கமான அதன் வாய் தன் உடல் மீது

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/68&oldid=1072833" இலிருந்து மீள்விக்கப்பட்டது