பக்கம்:ஆண் சிங்கம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன் (ரா. சு. கிருஷ்ணஸ்வாமி) 12-11-1920-ல் பிறந்தார். திருநெல்வேலி ஜில் லாவில் உள்ள ராஜவல்லிபுரம் அவரது சொந்த ஊர். வாழ்க்கைப் பாதையில்-முதலில் சர்க்கார் ஆபீஸ் குமாஸ்தாவாக அடி எடுத்து வைத்த போதி லும், எழுத்து வெறி பற்றி நான்கு வருஷ சேவையை உதறிவிட்டு, எழுத்தாளனாக முன் வந்தார். 1940 முதல் அவரது எழுத்துக்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. 1943 முதல் சில வருஷ காலம் பத்திரிகை அலுவலகங் களில் பணிபுரிந்தார். ‘திருமகள்’ (மாசிகை), ‘சினிமா உலகம்’ (மாதம் இருமுறை) 'நவசக்தி' (மாசிகை) ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரிய ராக அனுபவம் பெற்று, பின்னர் ‘கிராம ஊழியன்’ (மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறை) ஆசிரிய ரானார். 'ஊழியன்’ நின்றதும், 1947-ல் அவர் சென்னை வந்து சேர்ந்தார். ‘ஹனுமான்’ வாரப் பத்திரிகையில் இரண்டு வருஷங்கள் (1949-51) துணை ஆசிரியராகக் கடமையாற்றினார். அதன் பிறகு, சுயேச்சை எழுத்தாளராகவே சென்னையில் வசிக்கிறார். வனா.கனா ஒரு பிரமச்சாரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/7&oldid=1495040" இலிருந்து மீள்விக்கப்பட்டது