பக்கம்:ஆண் சிங்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்



அவன் வந்தான். மை போட்டுப் பார்த்தான். ‘இதெல்லாம் சூனியக்காரன் ஒருவன் செய்கிற வேலை தான்’ என்று சொன்னான். அதற்கு மாற்று வைக்கும்படி மாணிக்கம் வேண்டிக் கொள்ளவும் மாடசாமி பணி வுடன் தலை அசைத்தான்.

‘எனக்கு அவ்வளவு தூரத்துக்கு சக்தி இல்லை. இது மாதிரி மந்திர தந்திர வேலைகள், சூன்யம் வைப்பது, வைத்ததை எடுப்பது, செய்வினை வைத்திருந்தால் அதை முறிக்கத் தகுந்த நடவடிக்கைகளைக் கையாள் வது முதலியவற்றுக்கெல்லாம் மலையாளத்து மந்திர வாதிகள்தான் கைகாரர்கள். எனக்கு அவ்வளவாக ஞானம் பற்றாது என்று சொன்னான் அவன்.

‘அது சரி, இந்தப் பண்ணி கண்ணிலே படாமல் இருக்கணுமின்னா என்ன செய்யவேண்டும்? என்று சூரியன் பிள்ளை கேட்டார்.

‘உங்க பண்ணையிலே வேலைசெய்கிற ஆட்களிலே ஒருவனேதான் இதுக்கு மூலகாரணம். நீங்க ஒண்ணு பண்ணுங்க. கொதிக்க கொதிக்க வெந்நீரை ரெடியா வச்சிருங்க. அந்தப் பண்ணி கண்ணிலே படும்போதெல் லாம் வெந்நீரை அள்ளி அது மேலே வீசி அடியுங்க. பயப்படாமே–என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று கவலைப் படாமல்–வெந்நீரைக் கொட்டிக்கொண்டே இருங்க. அப்புறம் என்ன–நடக்குதோ, பார்ப்போம் என்று மாடசாமி வழி வகுத்துக் கொடுத்தான்.

சூரியன் பிள்ளைக்கு இந்த வழி மிகவும் பிடித்து விட் டது. சுலப சாத்தியமானதாகவும் தோன்றியது. அந்தத் தடிப்பன்றி அந்தி நேரத்தில் தானே ஆஜராகிறது. சாயங்காலம் அஞ்சு மணியிலிருந்தே வெந்நீர் தயாராக இருக்கவேண்டும் என்று உத்திரவிட்டார் அவர்.

தொழுவத்தில் அடுப்புக் கட்டிகள் மீது ஒரு கொப்பரை நிறையத் தண்ணீர் தோட்டத்தில் அடுப்பு மீது ஒரு ‘அண்டாவிலே’ தண்ணீர். வாசலில் திண்ணை ஓரத்தில் விசேஷமாக அடுப்பு அமைத்து அதன் மீதும் ஒரு கொப்பரைத் தண்ணீர். இவற்றைச் சூடுபடுத்தத்

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/71&oldid=1072195" இலிருந்து மீள்விக்கப்பட்டது