பக்கம்:ஆண் சிங்கம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


தனித்தனி ஆட்கள், அருகிலே கைக்கு வசதியாக வாளி செம்பு வகையரா. தீவிரமாகச் செயல் புரிவதற்கு வழி கிடைத்துவிட்ட உற்சாகத்திலே திட்டம் தீட்டினர் பண்ணையார்.

இவ்விஷயம் வேலையாட்கள் எல்லோர் காதுகளையும் எட்டியது. ஒவ்வொருவரும் பண்ணையாரின் போக்கைப் பற்றி ஒவ்வொரு விதமாகப் பேசினார்கள். ஆயினும் அதிசயம் நிகழாது போகவில்லை.

வெந்நீர் தயாரிக்கத் தொடங்கிய நாளிலிருந்து தடிப்பன்றி தலைகாட்டாமலே போய்விட்டது. ஒரு நாள். இரண்டு நாள், ஒரு வாரம்–ஊம் ஹூம், அது விஜயம் செய்யவே இல்லை.

வெந்நீர் வைத்தியம் பற்றி பண்ணியா பிள்ளைக்கும் தெரிஞ்சுபோச்சு! அதனலேதான் அவரு பயந்துபோயிப் பம்மிவிட்டாரு!’ என்று பண்ணையார் மாணிக்கத்திடம் சொன்னார். ரசித்துச் சிரித்தார்.

அதற்காக வெந்நீர் தயாரிப்பை நிறுத்திவிடவில்லை அவர். அதுபாட்டிற்கு ஒழுங்காக தினந்தோறும் மூன்று கொப்பரை நிறைய வெந்நீர் கொதிக்கக் கொதிக்கத் தயாராகி வந்தது. பண்ணேயாருக்கு என்ன! விறகு இல்லையே என்ற கவலை ஏற்படப் போகிறதா? தண்ணீர் கஷ்டமா? இல்லை, வேலை ஆட்களுக்குத்தான் குறைவா! ஆகவே தினசரி சாயங்காலம் வெந்நீர் தயாராகிக் கொண்டிருந்தது.

‘வரும் வரும், என்றாவது ஒரு நாள் அந்தத் தடிப் பண்ணி திரும்பவும் வராமலா இருந்துவிடும்! அப்ப பார்த்துக்கொள்வோம், என்று நம்பியிருந்தார் பண்ணையார்.

அவர் தம்பிக்கை வீண் போகவில்லை.

பத்து நாட்கள் வராதிருந்த பன்றி பதினோராவது நாள் வந்து சேர்ந்தது.

அப்பொழுதும் அந்தி நேரம்தான். ஆட்கள் எல்லோரும் விடை பெற்றுக்கொண்டு போய் விட்டார்கள். மாணிக்கம் மாத்திரம் இருந்தான்.

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/72&oldid=1072836" இலிருந்து மீள்விக்கப்பட்டது