பக்கம்:ஆண் சிங்கம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

 ‘இரக்கமற்ற தன்மை’ பாறையாய் படிந்திருக்கவில்லை என்பது புரிந்தது.

விழுந்து கிடந்தவன் மீது அவன் பார்வை பட்டதும் அவன் நின்றான், கவனித்தான். ஏனய்யா எல்லாரும் சும்மா நிக்கிறீங்க? அந்த ஆளுக்கு என்ன – ஏது என்று கவனிக்கப்படாது? எங்கே அடிபட்டிருக்குதோ? என்று தன் எண்ணத்தைச் சொன்னான் அவன்.

‘வந்துவிட்டாரய்யா பரோபகாரி! ஏம்பா, நீயே கவனியேன். இவருக்குத்தான் பெரிய கவலை’ – குரல்கள் வெடித்தன. யார் குரல் – எவர் பேச்சு எனப் பிரித்துப் பேச முடியாத விதத்திலே இணைந்து கலந்தது ஏகச் சிரிப்பு.

அவன் கோபிக்கவில்லை. முகம் சுளிக்கவில்லை. தலைக் கூடையை நடைமேடையின் ஒரு ஓரத்தில் இறக்கி வைத்துவிட்டு, கூட்டத்தில் வழி செய்து கொண்டு விழுந்து கிடந்தவனின் சமீபம் சென்றன். அன்புடன் அவனைக் கவனித்தான். ஆதரவாகச் சில வார்த்தைகள் பேசி, அவனை மெதுவாகத் தாங்கி எடுத்து உட்கார வைத்தான். அவன் உடம்பைத் தடவித் துடைத்தான். அவனுக்குத் தாங்கலாக எழுந்து நின்று அவனைக் கைப்பிடித்து மெதுமெதுவாக நடக்கச் செய்தான். ‘குடிக்க ஏதாவது வேண்டுமா? என்று கேட்டான். அவனை மேடைமீது உட்கார வைத்து விட்டு, கீழே கிடந்த மூட்டையை எடுத்து அவனிடம் சேர்ப்பித்தான்.

‘நாட்டுப்புறத்தான் எவனோ செய்து நின்ற செயல்களில் அக்கறை காட்ட விரும்பாத நகர மகா ஜனங்கள் – கீழே விழுந்தவன் பலத்த காயம் படாமல் பிழைத்து எழுந்ததில் ஏமாற்றம் கொண்டவர்களாய் முனங்கிக்கொண்டே கலைந்தார்கள்.

விழுந்து எழுந்தவன், முகத்தில் நன்றி காட்டி, அதே இடத்தில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான்.

அவனுக்கு உதவி செய்தவன். கீழே வைத்த தனது சுமையைத் தலைக்கு இறக்கி ஏற்றிக் கொள்வதற்குப்

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/89&oldid=1072217" இலிருந்து மீள்விக்கப்பட்டது