பக்கம்:ஆண் சிங்கம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்


அவர் நினைப்பார். குழந்தைகளோ அவரை ‘பூச்சாண்டி’ என்று எண்ணி முகம் சுளித்தன. அவரைக் கண்டதுமே சில குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவதுமுண்டு.

சிறுவன் ஒருவன் தெருவாசல் படியில் நின்று, அவர் போகும் பொழுதும் வரும் பொழுதும், ‘குட்மார்னிங் ஸார்!’ என்று சொல்லி, சலாம் போடுவதும் வழக்கம். ஒருசமயம் அவர் அவனோடு பேசலாமே என்று நின்றார், ‘ஏய் பையா, இங்கே வா’ என்றார். அவ்வளவுதான். அந்தப் பையன் பயந்து போய் எடுத்தான் ஓட்டம். அவருக்கு ஏமாற்றமாகி விட்டது. அதன் பிறகு அவன் அவர் வருகைக்காகக் காத்து நிற்பதும் இல்லை; ‘குட்மார்னிங்’ சொல்ல ஆசைப்படவுமில்லை. –

தரித்திரம் மனிதனைத் தனியனாக்குகிறது. துயரம் அவனைத் தனியனாக்குகிறது. இன்பமிகுதியும் ஒரு வனைத் தனியனாக்கி விடுகிறது.

வறுமை வெயிலில் வதங்குகிறவனும், துயர நெருப்பில் வதங்குகிறவனும், இன்பநிறைவால் துடிப்பவனும் தனது உணர்ச்சிகளைப் பற்றிப் பிறரிடம் பேச வேண்டும் என்று தவிக்கிறான். அவனோடு பொழுது போக்குவதற்கு எவரும் துணை சேராதபோது அவன் திண்டாட்டமே தனி வேதனையாகி விடுகிறது.

இஷ்டலிங்கம் பிள்ளைக்கு மனைவி இல்லை. இருந் தாலாவது அவளோடு பேசலாம். சண்டை பிடிக்கலாம். எரிந்து விழலாம். தன் குறைகளைப் புலம்பலாம். உவகை மிகுதியை எடுத்துச் சொல்லலாம். மனப் பாரத்தை இறக்கி வைப்பதற்கு ஏற்ற சுமை தாங்கியாகவும் அவளை மாற்றலாமே!

ஆனல், மனைவி என்றொருத்தி இருந்தால் அவர் அப்படி எல்லாம் அவளோடு பழகுவாரோ என்னவோ! அவரோடு ஒரு பெண் மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்திருக்க முடியுமோ என்னவோ!

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/93&oldid=1072857" இலிருந்து மீள்விக்கப்பட்டது