பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ஷ்ட கவசம் வசூலித்தான். அவன் கூறியது பொய்யன்று. உண்மை யாகவே முதல் தரமான அறுவடை இயந்திரம் ஒன்று அவன் செய்தான். ஆனால், விவசாயிகள் அந்த இயந்திரத்தை வாங்கமட்டும் முன்வரவில்லை. ஏனென்றால், ஆட்களைக் கொண்டு நெல் அறுப்பதற்குப் பத்து ரூபாய் பிடிக்கு மென்றால், அவனுடைய இயந்திரத்தைக் கொண்டு அறுப் பதற்கு முப்பது ரூபாய் ஆவதாயிருந்தது. ராமு இதை ஒப்புக்கொள்ளவில்லை. தன் இயந்திரத் தின் சக்தியை நிரூபித்துக் காட்டுவதற்காக அவன் விவசா யத்தை மேற்கொண்டான். இதற்காக அவன் பாலைவனம் போலிருந்த ஒரு பொட்டைக் காட்டில் 200 ஏக்ரா நிலம் தர்க்காஸ்து எடுத்தான். ஐந்து வருஷ காலத்தில் மேற்படி நிலத்தின் பெறுமானம் ஒரு லட்சம் ரூபாய் ஆகி விடுமென்று அவன் கூறினான். இதை நம்பிச் சிலர் அவனுக்குக் கடன் கொடுத்தார்கள். நிலம் நன்றாகப் பண்படுத்தப்பட்டது. ஆனால், பாதாள லோகம் வரைக்கும் வெட்டியும் தண்ணீர் மட்டும் கிடைக்கவில்லை. ராமுவிடம் ஒரு பெரிய விசேஷமென்னவென்றால், எவ் வளவுதான் தோல்வியுற்றாலும் அவன் உற்சாகம்மட்டும் குன்றுவதில்லை. அளவிலாத ஊக்கத்துடனும் பிடிவாதத் துடனும் அவன் புதிய துறைகளில் திரும்பத் திரும்ப முயற்சி செய்துவந்தான், விவசாயம் பயனில்லாமற் போனதும், அவன் ஒரு செட்டியாருடன் சேர்ந்து லாபத்தில் கூட்டு என்ப தாக ஏற்பாடு செய்துகொண்டு சீமை ஜவுளி வியாபாரம் தொடங்கினான். இது 1921ஆம் வருஷத்தில். எல்லோரும் அப்போது பித்துப் பிடித்தவர்கள் போல் சீமைத்துணிகளைக் கொளுத்தி வந்தார்கள். உங்களுக்குத்தான் தெரியுமே; நான்கூட அந்த வருஷத்தில் மூன்றே வருஷம் உபயோகப் படுத்தியிருந்த புத்தம் புதிய கிளாஸ்கோ கிளாஸ்கோ மல் ஒன்றை நெருப்பில் போட்டுவிடவில்லையா? இந்தக் கொள்ளையில் சீமைத்துணி யார் வாங்கப் போகிறார்கள்? ஆகவே வருஷக் கடைசியில் கணக்குப் பார்த்தபோது 1,200 ரூபாய் நஷ்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/10&oldid=1721394" இலிருந்து மீள்விக்கப்பட்டது