பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ஷ்ட கவசம் இல்லையப்பா, இல்லை! அவற்றிற்கெல்லாம் தலை முழுகி விட்டேன். இப்பொழுது பணம் சம்பாதிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறேன்." "எப்படி? எப்படி?" "மகாசக்தி அதிர்ஷ்ட கவசத்தைப்பற்றி நீ ஏற் கெனவே கேள்விப்பட்டதே கிடையாதோ?" பத்திரிகையில் "கேள்விப்படாமலென்ன? பெரிய பெரிய விளம்பரங்கள்கூடப் பார்த்திருக்கிறேன். ஆனால் மறுபடியும் பழைய கதைக்கே வருகிறாயே?" "அவசரப்படாதே! அந்த மகாசக்தி அதிர்ஷ்ட கவசந் தான் நான் அணிந்திருப்பது. அதைச் செய்பவனும் நான் தான். மாதம் 5,000 கவசங்களுக்குக் குறையாமல் விற்கிறேன். பர்மா, சிங்கப்பூர், தென் அமெரிக்கா.கம் போடியா, நெட்டால் முதலிய இடங்களிலிருந்தெல்லாம் என் கவசத்துக்கு ஆர்டர் வருகிறது. விளம்பரச் செலவுக ளெல்லாம் போக, மாதம் எனக்கு 4,000 ரூபாய் கிடைக் கிறது. கிட்டு! நீயும் ஒரு கவசம் வாங்கி இதன் சக்தியைச் சோதித்துப் பார்க்கலாமே? விலை இரண்டே ரூபாய்தான். ஒன்று வி.பி.பி.யில் அனுப்பி வைக்கட்டுமா?" என்று சொல்லிக்கொண்டே ராமு மோட்டாரைச் தொடங்கினான். செலுத்தத் அதிர்ஷ்டம் அடித்தாலும் இப்படியல்லவா அடிக்க வேண்டும்? (என்று கூறி டாம்பீகம் ஐயங்கார் தம் கதையை முடித்தார். இதற்குள்ளாக எருமையின் பிரசவம் ஆகி நீதி யதி வந்துவிடவே வக்கீல்கள் எல்லோரும் கோர்ட் மண் டபம் போய் சேர்ந்தார்கள். ஓம் தத் ஸத்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/14&oldid=1721398" இலிருந்து மீள்விக்கப்பட்டது