பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2, விவசாயச் சிறப்பு! என்னுடைய விவசாய ஞானத்தை உலகிற்கு வெளிப் படுத்த இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமென்று தோன்றவில்லை. நேயர்கள் சிலருக்கு இதைப்பற்றிச் சந்தேகம் உதிக்கலாம். 'என்னடா இது? ஒரு பக்கம் லண்டனில் வட்ட மேஜை மகாநாடு கூடிச் சக்கர வட்டமான பேச்சுக்கள் தட புடல்படுகின்றன; மற்றொரு பக்கம் இந்தியாவில் ராஜீய நிலைமையில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. விவசாயத் தைப்பற்றி எழுத இதுதானா சமயம்? தாடி பற்றி எரியும் பொழுது சுருட்டுக்கு நெருப்புக் கேட்ட கதையாகவல்லவா இருக்கிறது?" என்று நினைக்கலாம்.

ஆனால் மேற்சொன்ன பழமொழி இந்தச் சந்தர்ப் பத்துக்கு அவ்வளவு பொருத்தமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். 'ரோமாபுரி பற்றி எரிகையில் நீரோ பிடில் வாசித்தது போல்' என்பதாக ஆங்கிலத்தில் மற்றொரு பழ மொழி உண்டு. இந்தச் சமயத்துக்கு இதுதான் பொருத்த மென்று தோன்றுகிறது. நீரோ சக்கரவர்த்தி பிடில் வாசிக்க எவ்வளவு நல்ல தருணம் பார்த்தான் பாருங்கள்! வேறு யாருடைய காதிலும் பிடில் சத்தம் விழுந்து அவர்கள் காது புண்ணாகாமல், எல்லோரும் ஓடிப்போன சமயம் பார்த்துப் பிடிலை எடுத்துக்கொண்டான்! என்ன கருணை! என்ன தயை! அக்கம் பக்கத்து வீடுகளில் பிடில், ஹார் மோனியம் கற்றுக்கொள்வார் எல்லாரும் இவ்வளவு கருணை யுடன் நடந்துகொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

.

ஆகையினால்தான், நானும் இவ்வளவு நல்ல சமயம் பார்த்தேன். தேசத்தில் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/15&oldid=1721399" இலிருந்து மீள்விக்கப்பட்டது