பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஆனால் அவர்களெல்லாம் உழுதுண்டு பற்றியே சொல்லுகிறார்கள்: உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் தாழுதுண்டு பின்செல் பவர் என்று வள்ளுவரும். உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை பழுதுண்டு வேறோர் பணிக்கு’ ஆளந்த ஓவியம் வாழ்வதைப் மற்றெல்லாம் கண்டீர் என்று ஒளவையும் கூறுகின்றனர். இக் கூற்றுக்களைக் குறித்து நிரம்ப அபிப்பிராய பேதத்துக்கு இடமிருக்கிறது, முக்கியமாக, உழுதுண்டு வாழும் ஜனங்கள் இக்காலத்தில் இதற்கு நேர்மாறான அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைக் குறித்துப் பிரிட்டிஷாருக் கும் இந்தியர்களுக்கும் எவ்வளவு அபிப்பிராய பேதம் உண்டோ அவ்வளவு இந்த விஷயத்திலும் காணப்படுகிறது. ஆனால் ஒன்று பரம நிச்சயம்: உழுதுண்டு வாழ்தல் நல்லதோ கெடுதலோ, கஷ்டமோ சுசுமோ, எப்படியானா லும் சரியே, உழுதுண்ணக் கற்பித்து வாழ்தல் பரம சுகமான வாழ்வு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நம்பிக்கை யில்லாதவர்கள் தயவு செய்து கோயமுத்தூர் விவசாயக் கலாசாலைக்குப் போய் பாருங்கள். இந்த ஜன்மத்தில் இல்லா விடினும் அடுத்த ஜன்மம் எடுத்தாவது விவசாயக் கலா சாலையில் ஆசிரியராக வேண்டுமென்று கடவுளை வேண்டுவீர் கள். இது நிற்க. விவசாயக் கலாசாலையையும் அக்கலாசாலை ஆசிரியர்கள் வசிக்குமிடங்களையும் பார்த்ததும் விவசாயத்தின் அருமை பெருமைகளைக் குறித்து எழுத வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது. ஆனால் விவசாயத்தைப்பற்றி எழுத வேறு யோக்கியதை எதுவும் எனக்கில்லை யென்று எண்ணி விடா தீர்கள். விவசாயக் கல்வி, விவசாய அநுபவம் இரண்டும் எனக்கும் உண்டு, பள்ளிக்கூடத்தில் நெல், பருத்தி, காப்பிக் கொட்டை, உருளைக்கிழங்கு, பீட்ரூட், புகையிலை முதலி வவைகளைப்பற்றிப் பாடம் படித்திருக்கிறேன். ஏன்? விவ சாயத்தைப்பற்றிக் கட்டுரை எழுதிப் பரிசுகூடப் பெற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/17&oldid=1721401" இலிருந்து மீள்விக்கப்பட்டது