14 ஆனந்த ஓவியம் வேண்டுவனவே என்று குருட்டாம் போக்காய் அடிப் பார்கள். விதை நெற் செடி பயிர் செய்வதற்குப் பல முறைகள் கையாளப்படுகின்றன. தெளித்து, நாற்றுப் பிடுங்கி, உழுது பரம்படித்த வயல்களில் நடுவது ஒரு முறை. ஆனால் இது மிகவும் பழமையான கர்நாடக முறையாகும். குழி தோண்டி விதை போட்டுச் செடி முளைத்துப் பெரிதாய் வளர்ந்ததும், வேருடன் பிடுங்கித் துண்டு துண்டாய் வெட்டிச் சட்டிகளில் வைத்துப் பயிராக்குவது மற்றொரு முறை. நெற் செடிகளை ஒட்டுப் போடும் முறைகூட இக் காலத்தில் சிலரால் கையாளப்படுகிறதாம். நெல்லுச் செடி நன்கு வளர்ந்து அதன் இலைகள் பழுப் படையும் சமயத்தில் கொத்துக் கொத்தாய்ப் பிஞ்சுவிட்டுக் காய் காய்க்கிறது. காய் முற்றியதும் ஜனங்கள் அவை களைப் பொறுக்கிச் சேர்ப்பார்கள். செடிகளை அடியோடு வெட்டி அவைகளைக் களத்தில் அடித்துத் தானியங்களை உதிர்த்துச் சேர்ப்பதுமுண்டு. அதற்கு அறுவடை என்று பெயர். ஒவ்வொரு நெல்லுக்குள்ளும் ஒவ்வோர் அரிசி தான் இருக்கும். சில நெல்களில் அதுகூட இருக்காது. வைகளுக்குப் பதர் என்று பெயர். ஜனங்கள் எதற்காக நெற்செடி பயிர் செய்கிறார்கள் தரியுமா? நெல் நமக்கு உணவாகப் பயன்படுகிறது. தைவிட வேறு நல்ல உபயோகம் எதுவும் இந்நாள் வரை யில் நெல்லுக்குக் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆகை யினால்தான் காருண்ய ஆங்கில துரைத்தனத்தார் நெல் சாகுபடி விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்தவில்லை யென்பது பிரசித்தமான விஷயமாகும். உதாரணமாக, பருத்தி, சணல் முதலிய பயிர்களை எடுத்துக்கொண்டால், அவைகள் எவ்வளவு நல்ல வழிகளில் பயன்படுகின்றன! எத்தனை யெத்தனை அந்நிய முதலாளிகள் கொழுக்கவும் உபயோகமாகின்றன! நெல்லோ, கேவலம் ஏழை இந்தியர் களின் பாழ் வயிற்றை நிரப்புவதற்குமட்டுமே பயன்படு கிறது. ஆகையினால்தான் பிரிட்டிஷ் சர்க்கார் நெற்பயிர்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/19
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை