18 ஆனந்த ஓவியம் செடியை மாடு தின்னுமா, என்ன? இதை எந்தப் புத்தகத் திலும் படிக்கவில்லையே? யாரும் சொல்லிக் கேட்டதுகூடக் கிடையாதே ! இந்த மாட்டின் சொந்தக்காரன்மேல் வழக்குத் தொடர்ந்தால் என்ன?" என்று யோசித்துக்கொண்டு நான் திக்பிரமை கொண்டவன் போல் நிற்கையில், ராஜம் மறுபடி யும், "என்ன மாமா! மாடு செடிகளை அழிக்கிறது. சும்மா நிற்கிறீர்களே? என்று கூவினாள். உடனே நான் விழித்துக் கொண்டு மாட்டின் கொம்பைப் போய்ப் பிடிக்கப் போனேன். ஆனால் அந்தப் பொல்லாத மாடு கொம்புகளை ஓர் ஆட்டம் ஆட்டி என்னை முட்ட வந்தது.
நல்ல வேளையாக இதற்குள் ராமு எங்கிருந்தோ ஓடி வந்தான்.விவசாய விஷயத்தில் குழந்தைகளுக்குப் பெரி யவர்களைவிட அதிகம் தெரியுமென்பது என்னுடைய அநு பவம். ராமு அந்த நெருக்கடியான நிலைமையில் என்ன செய் தான் தெரியுமா? பக்கத்தில் கிடந்த ஒரு தடியை எடுத்துக் கொண்டே எச்சரிக்கைகூடச் செய்யாமல் மாட்டின் முதுகில் நாலு நாலு சாத்துச் சாத்தினான். உடனே அந்தக் கோழை மாடு ஓட்டம் பிடித்தது. கேவலம் பெண்கள்கூட இக்காலத்தில் தடியடிகளுக்குப் புறங் கொடுத்து ஓடாமல் தீரத்துடன் நிற்கிறார்கள். அந்த 'ஆண் பசு'வுக்கு அவ்வளவு தைரியங்கூட இல்லை. மனிதர்களில் வீர தீர பராக்கிரம சாலிகளை ஏறு என்றும், காளை என்றும் கவிகள் வர்ணிப்பது அர்த்த மற்றதாகக் காணப்படுகிறது.
இன்னும் பத்துத் தினங்கள் கழிந்தன. கத்திரிச் செடி கள் மறுபடியும் தளிர்த்துப் பெரிய பெரிய இலைகள் விட்டுச் செழித்துக் காணப்பட்டன. மாடு, கன்று வராமல் ஓருவர் மாற்றி ஒருவர். 'கண்ணினைக் காக்கின்ற இமையில்' அவை களைக் காவல் புரிந்து வந்தோம். ஒரு நாள் காலை நான் படுக்கையை விட்டு எழுந்து வெளிவந்ததும் வீதியில் ஓர் அதிசயச் காட்சியைக் கண்டேன். முசுக் கட்டைப் பூச்சியைப்