பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஆனந்த ஓவியம் கொடுத்தேன். 'கத்திரிச் செடிகளைப் பூச்சிகள் அரித்துத் தின்றுவிட்டன. நெருக்கடியான நிலைமை.உடனே வந்து பார்வையிடவும்; அல்லது தந்தியில் யோசனை அனுப்பவும்.' ஒன்றரை ரூபாய் தொலைந்ததுதான் மிச்சம்! நாளது வரை பதில் கிடையாது. பிறகு பத்திரிகை படித்ததில் நான் தந்தி கொடுத்த அன்று விவசாயக் கமிஷனுக்குக் கவர்னர் மாளி கையில் நடனவிருந்து நடைபெற்றதாகத் தெரிந்தது. எனவே பதில் கிடைக்காதைக்குறித்து நான் ஆச்சரிப்படவில்லை. பின்னும் இருபது நாள் சென்ற பிறகு ஒரு நாள் காலை நான் படுக்கையை விட்டு எழுந்திருக்கலாமா, அல்லது போர் இழுத்துப் போர்த்துக்கொள்ளலாமா என்று வையை யோசனை செய்துகொண் டிருந்தபோது. ராஜம், மாமா! ஓடி வாருங்களேன்!' என்று கத்தினாள் 'குழந்தைக்கு என்ன ஆபத்தோ தெரியவில்லையே' என்று நான் அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்து ஓடினேன். 'சுத்திரிச் செடி பூத்திருக்கு!" என்று அளவிலாத குதூகலத் துடன் கூச்சலிட்டாள் ராஜம். பிடிவாதம், விடா முயற்சி என்கிறார்கள். கத்திரிச் செடியைப்போல் இந்தக் குணங் களுள்ள வேறொரு மனிதனையோ, பிராணியையோ நான் பார்த்ததில்லை; அதிகம் சொல்வானேன்? இருபது செடி கள் நட்டதில் ஒரு செடியானது எவ்வளவோ விபத்துக்களை யெல்லாம் தாண்டிக் கடைசியாகப் பூ பூத்து மூன்று காய் களும் காய்த்தது. அவற்றில் ஒன்று சொத்தையாய்ப் போயிற்று. பாக்கி இரண்டையும் செடியிலிருந்து பறித் தோம். அன்றைய தினம் என் மனைவியின் அடுத்த வீட்டுத் தோழி, சமையலுக்கு ஒன்றுமேயில்லை; கறிகாய் ஏதேனும் இருக்கிறதோ?' என்று கேட்கவே, என் மனைவி மிகுந்த பெருமையுடன், 'எங்கள் சொந்தக் கொல்லையில் காய்த்தது என்பதாக ஒன்றைக் கொடுத்துவிட்டாள். பாக்கி ஒரு காயை மேள தாளங்களுடனே நாலாக நறுக்கி, சாம்பாரில் போட்டோம். சாப்பாட்டின்போது தலைக்கு ஒரு துண்டம் கிடைத்தது. ஆஹா! என்ன இருந்தாலும் சொந்தக் கொல்லையில் பயிரிட்டுக் காய்த்த கறியின் சுவையே வேறு தான்; அந்த ருசி அநுபவித்தவர்களுக்கே தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/25&oldid=1721409" இலிருந்து மீள்விக்கப்பட்டது