பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயச் சிறப்பு? . 21 விவசாயத் துறையில் என்னுடைய சொந்த அநுபவம் இவ்வளவுதான். என்னுடைய தமையனாரின் அநுபவத்தை யும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு இக் கட்டுரையை முடித்து விடுகிறேன். கிராமத்திலுள்ள எங்கள் குடும்ப நிலங்களை அவர்தான் கவனித்து வருகிறார். ஒவ்வொரு வருஷ ஆரம் பத்திலும் அவர் மிக்க உற்சாகமாக விவசாய வேலை தொடங்குவார். 'இந்த வருஷம் குடும்பக் கடன் கட்டாயம் அடைபட்டுவிடும்' என்பார். ஆனால். பிரதி வருஷமும் அவருக்கு ஆசாபங்கம் உண்டாவதற்கான ஏதேனும் ஒரு காரணம் ஏற்பட்டே வருகிறது. சென்ற பத்து வருஷ காலத்தில் அவருடைய அனுபவங்களை எனக்கு எழுதிய கடிதங்களிலிருந்து சுருக்கமாகத் திரட்டி இங்கே கூறுகிறேன்: 1921ஆம் வருஷம்: இந்த வருஷம் ஆனி மாதத்திலேயே தண்ணீர் வந்து சாகுபடி வேலை அதிசீக்கிரம் தொடங்கி, ஆவணி மாதத்திற்குள் நடவெல்லாம் ஆகிவிட்டது. பயிர் நன்றாக வந்துகொண் டிருந்த சமயம் புரட்டாசி மாதத்தில் ஒரு காய்ச்சல் காய்ந்தது. விளைவு ஒன்றுக்குப் பாதிதான். 1922ஆம் வருஷம்: தண்ணீர்த் தட்டே இந்த வருஷம் கிடையாது. ஆனால், பயிர் செழித்து வளர்ந்து கதிர் வைக் ம் சமயத்தில் எப்படியோ சூறை விழுந்துவிட்டது. இதனால் ஒன்றுக்கு முக்கால்தான் கண்டுமுதல் ஆயிற்று. 1923ஆம் வருஷம் : மார்கழி மாதத்தில் அநியாயப் பனி பெய்து நெல்லெல்லாம் பதராய்ப் போய்விட்டது. மாவுக்கு 15 கலம் புள்ளி பார்த்தது 0 கலம்தான் கண்டது. 1924 ஆம் வருஷம் : வெள்ளப் பாழ். ஆவணி மாதத்தில் கொள்ளிடம் உடைப்பு எடுத்துக்கொள்ளவே நட்ட நட வெல்லாம் நாசமாய்ப் போயிற்று. நிலங்கள் எல்லாம் மண லடித்து மேடாய்ப் போகாமல் தப்பிப் பிழைத்தது தம்பி ரான் புண்ணியம். 1925ஆம் வருஷம்: கோடை மழை பெய்து நிலங்கள் இறுகிவிட்டன. ஒன்றுக்குப் பாதி விளைந்தால் பெரிய காரியம். 1926ஆம் வருஷம் : ஆகா! இந்த வருஷம்போல் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/26&oldid=1721410" இலிருந்து மீள்விக்கப்பட்டது