ய 3. எந்த ஊர், ஸார்? சில நாளைக்குமுன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த சத்தியாக்கிரஹிகள் சிலர், அவர்களுடைய பெயர், ஊர் முதலிய விவரங்கள் கேட்கப்பட்டபோது, 'வந்தே மாதரம் நம்பர் - I', 'வந்தே மாதரம் நம்பர் - II' என்று பெயர் கொடுத்தார்களென்றும், இதே மாதிரியாக 'ஊர் இந்தியா தேசம்', 'தகப்பனார் பெயர் மகாத்மா காந்தி என்பன போன்ற பதில்கள் அளித்தார்களென்றும் பத்திரிகையில் படித்தோம். 'விகட'னின் நயமிகுந்த நகைச் சுவையை அநுபவித்த நண்பர்களுக்கு மேற்கூறிய பதில்கள் கீழ்த்தர ஹாஸ்யமாகவே தோன்றக்கூடும். உயர்தர எனினும் பிறருக்குச் சம்பந்தமில்லாத நமது சொந்த விஷயங்களைப்பற்றி அநாவசியமான கேள்விகளுக்குப் பதில் சொல்லிச் சொல்லி என்னைப் போல் அலுத்துப் போனவர் கள் மேற்படித் தொண்டர்களின் மனப்போக்கை ஒருவாறு அறிந்துகொள்வார்கள். அவர்கள் கையாண்ட முறை சரியா, தவறா என்று நான் ஆராய்ச்சி செய்யப் போவதில்லை. ஆனால் அந்த மாதிரி கேள்விகளுக்கு ஏதேனும் ஒரு பரிகாரம் ஏற்படுத்தவேண்டும் என்பதை மட்டும் வற்புறுத்திக் கூறு வேன். • கோர்ட்டுக் கேள்விகள் ஒருபுறம் இருக்க, சாதாரண சமூக வாழ்க்கையில் இத்தகைய அநுபவம் நம் நேயர் களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும். உதாரணமாக, ரெயில் பிரயாணத்தை எடுத்துக்கொள்வோம். முன்பின் தெரியாத ஒருவர் நீர் ஏறிய மூன்றாம் வகுப்பு வண்டியில் உமக்கு எதிர்ப் பலகையில் வந்து உட்காருகிறார். வண்டி கிளம்புகிற வரையில் அவரவர்கள் தத்தம் காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். வண்டி கிளம்பிற்றோ இல்லையோ. வந்தது விபத்து.
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை