24 ஆனந்த ஓவியம் "தங்களுக்கு எந்த ஊர்; ஸார்?" என்று அந்த எதிரி தமது விநாயகரஸ்திரத்தை எடுத்து விடுகிறார். இந்தக் கேள்வி இன்னும் பல வடிவங்களிலும் கிளம்பு தல் கூடும். 'ஐயர்வாளுக்கு எந்த ஊரோ?', 'ஏனப்பா உனக்கு இதே ஊர்தானா?', 'ஏன் தங்களுக்கு நேடிவ் பிளேஸ் எது?' அல்லது முழு இங்கிலீஷிலோ, மலையாளத்திலோ, தெலுங்கிலோ அந்தக் கேள்வி கிளம்பும். அது புறப்படாமல் மட்டும் இராது. அந்த முதல் கேள்விக்கு நீர் பதில் சொல்லி விட்டீரானால், எதிரிக்குப் பாதி ஜயம் கிடைத்தது போலத் தான்; மற்றக் கேள்விகளும் வரிசையாகப் புறப்படும். "தாங்கள் எந்த ஊர்?" "விருத்தாசலம்." சொந்த ஊரே அதுதானோ?" "ஆமாம்!" அப்படியா? தங்கள் பெயரென்னவோ?" "பெயர் அண்ணாமலை." "குலம்? பிள்ளையா? செட்டியாரா? 'முதலியார். .. "முதலியாரா? ரொம்ப சந்தோஷம். அப்படித்தான் நானும் நினைத்தேன். விவாகம் ஆகிவிட்டதோ? . 'ஆஹா! ஆகிவிட்டது." 'குழந்தைகள் உண்டோ?" "ஏதோ ஆண்டவன் கொடுத்திருக்கிறான்." "போகட்டும்; எவ்வளவு குழந்தைகளோ?" மூென்று.' "எல்லாம் ஆணோ? பெண்ணுண்டோர்" "இரண்டு ஆண், ஒரு பெண். 'பேஷ்! மொத்தம் பிறந்ததே மூன்றுதானாக்கும்?"* "இல்லை; நாலு பிறந்தது; ஒன்று செத்துப் போயிற்று.' "ஐயோ பாவம்! இறந்தது ஆணோ, பெண்ணோ?" "பெண்."
- பெண்தானே?
போகட்டும். தலைச்சனாக்கும்?"* "இல்லை கடைசியில் பிறந்தது."