28 ஆனந்த ஓவியம் துக்குப் பிறகு காங்கிரஸைப்பற்றி இப்படிக் கேள்வி கேட்ப வர்கள் அநேகமாக இருக்கமாட்டார்கள். யொன்றில் பிற்பாடு நான் நான் தமிழ்ப் பத்திரிகை உதவியாசிரியனாயிருந்த காலத்தில், ஒரு கிழவருடன் சம்பாஷிக்க நேர்ந்தது. கிழவருடைய புதல்வன் ரெயில்வே ஸ்டேஷனில் கூட்ஸ் கிளார்க் என்பது எனக்குத் தெரியும். எனவே, அவர், 'சம்பளம் என்ன?" என்ற கேள்விக்கு வந்த போது, என் உண்மை வள்ளலை அவரிடம் கூசாமல் கூறலாம் என்று நினைத்துச் சிறிது இறுமாப்புடனேயே, 'சம்பளம் 60 ரூபாய்" என்றேன். இதனால் என்மீது அவருக்குள்ள மதிப்பு சிறிது உயரும் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் அந்தப் பொல்லாத கிழவர், அத்தகைய மதிப் பைச் சிறிதும் தெரிவியாமல் 'மேல் வரும்படி ஏதாவது உண்டோ?' என்று கேட்டார். ஈன ஸ்வரத்தில், "இல்லை" என்று நான் சொன்னதும், "இவ்வளவுதானா? நம்ம பையனுக்குக் கூட்ஸ் கிளர்க் உத்தியோகம். சம்பளம் 30 ரூபாய்தான். ஆனால் மேல் வரும்படி 50 ரூபாய்க்குமேல் வரும் என்று பெருமை ததும்ப உரைத்தார். எனவே, நான் அக்கிழவர் முன்னால் தோல்வியை ஒப்புக் கொள்ளும்படியாயிற்று. இவ்வாறு நான் பலமுறை எதிரிகளின் கையில் தோல்வி யடைந்திருக்கிறேனாயினும், ஒரே ஒரு தடவைமட்டும் ஒரு நபரை முற்றும் முறியடித்து ஓட்டியிருக்கிறேன். அது சமீபத்தில் நடந்த சம்பவம். என் நண்பர் ஒருவர் சத்தியாக்கிரஹ இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை செல்ல விருந் தார். அவரை அனுப்பி வருவதற்காக அவருடைய வழக்கு விசாரணைக்குப் போயிருந்தேன். விசாரணைக்குப் போனதில் என்னுடைய முக்கிய நோக்கம், அந்த நண்பருடைய பௌண்டன் பேனாவும், கைக் கடிகாரமுமாகும். அவற்றின் மேல் எனக்கு வெகுநாளாகக் கண் இருந்தது. 'இதுதான்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை