பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆனந்த ஓவியம் பத்தொன்பது வயது என்றீர்கள்! அப்புறம் 125 என்கிறீர் கள்.. "பார்த்தீரா? பார்த்தீரா! நீர் என்ன, பத்திரிகை நிருபரோ! நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்கிறீரே! எனக்கு 125 வயது என்று நான் சொன் னேனா?" மறுபடியும் சற்று நேரம் யோசித்தார். உடனே அவர் முகம் பிரகாசம் அடைந்தது. 'அட இழவே! சாலிவாகன சகாப்தத்தில் வருஷம் சொல்கிறீராக்கும்! முன்னமே சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா? இருக்கட்டும்; உமக்கு 19 வயதுதான் என்றா சொல்கிறீர்? "அதுதான் என் அபிப்பிராயம். இதைப் பத்திரிகை யில் வெளியிடுவதற்கும் உமக்கு அதிகாரம் கொடுக் கிறேன்!" .. அப்படி யென்றால் நீர் சொக்கலிங்க செட்டியாரைப் பார்த்திருக்க முடியாதே!" "என் விஷயமாக என்னைவிட உமக்கு அதிகம் தெரி கிறது. பிறகு என்னை ஏன் கேட்கிறீர்?" .. 'இல்லை, ஸார்! கோபித்துக்கொள்ளாதேயுங்க. செட்டியாரை எப்படி உங்களுக்குப் பரிச்சயம்?" "ஆ! அப்படி வாருங்கள் வழிக்கு! செட்டியாருடைய கருமாதிக்கு நான் போயிருந்தேன். புரோகிதர் 'சுக்லாம். பரதரம்' ஆரம்பித்தபோது அடக்கமுடியாத தும்மல் வந்து தும்மினேன். அதற்காக 'என்னடா, அபசகுனம்?' என்று செட்டியார் கோபித்துக்கொண்டார். "இது என்ன ஓய் முழு மோசமாய் இருக்கிறது? செட்டியாருக்குக் கருமாதி என்றால் அவர் செத்துப் போயிருக்க வேண்டுமே; நீர் தும்மினால் அவருக்கு என்ன கவலை? "அதுதான் ஸார், இத்தனை நாளாய் எனக்கும் புரிய வில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே? செட்டியார் எப் போதும் ஒரு மாதிரி மனிதர்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/37&oldid=1721421" இலிருந்து மீள்விக்கப்பட்டது