பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்ச்சி பொங்கட்டும்! . எங்கும் பரவட்டும்! தம் காலத்தில் வாழ்ந்த ஆனந்தக் கலைஞர் ஒருவரைப் பற்றிக் கல்கி எழுதுகையில், 'பரோபகாரங்களில் மிகச் சிறந்த பரோபகாரம் எது என்று எண்ணிப் பார்த்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் காலங்கழிப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதுதான்!' என்று சொன்னார். இப்படிச் சொன்ன கல்கியே இத்தகைய பரோபகாரம் செய்தவர்தான்! 'பொன்னியின் புதல்வரில் சுந்தா கல்கி இதழ் டிசம்பர் 28, 1975 கல்கி அவர்களின் நகைச் சுவை எழுத்தால் எத்தனையோ பேர் கவலைகளை மறந்து சிரித்தனர்; சிரித்துக்கொண்டு இருக் கின்றனர்! இத்தகைய மகிழ்ச்சி பொங்கச் செய்கிற பரோபகார காரியத்தை, பாலரவி நிறுவனமும் மேற்கொண்டிருக்கிறது. 'ஆனந்த ஓவியம் என்ற தலைப்பில் பல்வேறு நகைச் சுவை எழுத்தாளர்களின் ஹாஸ்யப் படைப்புகளை நூல் வடிவில் பிரசுரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. புத்தகமாக நகைச் சுவை எழுத்தாளருள் முதல் எழுத்தாளரான கல்கியின் நூலை இந்தத் தொடரில் முதல் வெளியிடுகிறார் திரு. வேங்கடராமன். பாலரவி பிரசுரத்தின் உரிமையாளர் கல்கி அவர்கள் எழுதிய இக்கட்டுரைகள் இதுவரை நூல் வடிவம் பெறாதவை. இவைகளை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகைக்கு என் நன்றி உரித்தாகும். இதேபோல் இன்றுவரை நூல் வடிவில் அச்சாகாத அமரர் கல்கி அவர் களின் வேறு பல கதை, கட்டுரைகளையும் தொகுத்து நூல் வடிவம் பெறச் செய்யப் போகிறார் திரு.வேங்கடராமன். அவரது முயற்சி வெல்க! பொங்கும் மகிழ்ச்சி எங்கும் பரவுக! சென்னை 34 24-12-1975 கி.ராஜேந்திரன் ஆசிரியர், 'கல்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/4&oldid=1721388" இலிருந்து மீள்விக்கப்பட்டது