எந்த ஊர், ஸார்? "அப்படியானால் அதில் மர்மம் ஒன்றுமில்லையே? 66 35 "முழுவதும் சொல்வதற்குள் அவசரப்படுகிறீரே! அந்தப் பெரிய மச்சம் என்னுடைய இடது தோளில் இருக்கிறது; இப்போது என்ன சொல்கிறீர்?" ஒன்று நீர் பைத்தியமா யிருக்கவேண்டும்; அல்லது நான் பைத்தியமா யிருக்கவேண்டும்." "நான் பைத்தியமில்லை.உம்மைப்பற்றி எனக்குத் தெரி யாது.ஆனால்,மேற்படி சம்பவத்தில் எல்லாவற்றிலும் அதி சயமான விஷயத்தை நீர் கேட்கவில்லையே? இன்னாசியைப் புதைப்பதற்கு எல்லா ஏற்பாடும் தயாராயிருந்தபோது அங்கே வசித்த ஒரு மயில் தன் இனிய குரலை எடுத்துக் கூவிற்று.உடனே இன்னாசி சட்டென்று எழுந்து, இரண்டு இறகு கேட்டு வாங்கிக்கொண்டு வருகிறேன் என்பதாக அந்த மயிலைத் துரத்திக்கொண்டு ஓட்டம் பிடித்தான். எல்லோரும் ஏமாந்து போனோம்." இதற்குள் தஞ்சாவூர் ஸ்டேஷன் வந்தது. அந்த நன்றி கெட்ட சி.ஐ.டி.காரன் ஒரு 'குட் மார்னிங்' கூடச் சொல்லாமல் எழுந்து போனான். அன்றைய தினம் அவன் என்ன 'டைரி' எழுதினான் என்று பார்க்க எனக்கு எவ் வளவோ ஆவல் உண்டு. ஆனால், இந்த ஜன்மத்தில் அது கைகூடாது என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்?
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை