பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆனந்த ஓவியம் என்பது ஒரு முதுமொழி. உலகத்திலே கலகம் இல்லா திருப்பது ஒன்றுதான் முக்கியமான காரியம் என்றால், நாம் எல்லோரும் ஊமைகளாகிவிடலாம். இம்மாதிரியே, கலகம் உண்டாவதெல்லாம் ஸ்திரீகளினால் தான் என்றும் சொல்லப் படுவதுண்டு. சீதை இல்லாவிட்டால் இராமாயணம் இல்லை; துரோபதி இல்லாவிட்டால் பாரதமில்லை; ஹெலன் இல்லாவிட்டால் டிராய் யுத்தம் இல்லை. ஆதலின் பெண் கள் இல்லாவிட்டால் கலகம் கிடையாது' என்று சொல் வார்கள். இதற்காக உலகில் பெண்களே வேண்டியதில்லை யென்று தீர்மானித்து விடலாமா? இதில் ஒரு சங்கடந்தான் இருக்கிறது. பெண்கள் இல்லாவிட்டால் கலகம் இல்லாம லிருக்கலாம்; ஆனால், அதோடு உலகமும் இல்லாமல் போய் விடும்; அவ்வாறே பேச்சில்லாவிடில் கலகமில்லாமலிருக்க லாம்: அத்துடன் சிநேகமும் இல்லாமல் போய்விடும். மௌனத்திற்கு ஒரே ஓர் உபயோகந்தான் உண் டென்று எனக்குத் தோன்றுகிறது. ஏகாதசி ஏகாதசி உபவாசத் திற்குப் பிறகு துவாதசி பாரணை ருசிப்பதைப் போல், ஒரு நாள் மெளனமாயிருந்தால் மறு நாள் பேச்சின் சுவை அதிக மாகக் கூடும். மகான் தாயுமானவர் மௌனத்தின் சிறப்பைக் குறித்து எல்லையில்லாமல் பாடியிருக்கிறார். அவரும், பட்டினத்தடிகளும் தற்செயலாகச் சந்தித்தார்க ளென்று ஒரு நிமிஷம் கற்பனை செய்துகொள்வோம். அவர் களுக்குள் பின்வருமாறு சம்பாஷணை நடக்கலாமென்று தோன்றுகிறது: 'று' தாயு: பட்டினத்தாரே! மௌனத்தின் சுகத்தைப் பார்த்தீர்களா? என்ன ஆனந்தம்! என்ன அற்புதம்! பட்டி : தாயுமானாரே! சும்மா இருப்பதே சுகமென்று சொன்ன உம் வாயில் சர்க்கரையை அள்ளிக் கொட்ட வேண்டும். மௌன இன்பத்தின் முன்னால் மற்ற இன்பங்க ளெல்லாம் துச்சம்! துச்சம்! துச்சம்! ஒரு முகூர்த்த காலம் பேசினாலும் இவர்களால் மௌன இன்பத்தைப்பற்றி முழுதும் பேசி முடிக்க முடியாது. •இனிது இனிது ஏகாந்தமினிது' என்று தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/43&oldid=1721427" இலிருந்து மீள்விக்கப்பட்டது