பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆனந்த ஓவியம் அறிந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்களாயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? 'இவன் என்ன காங்கிரஸ் நகரைப் பார்க்கும்படி நமக்குச் சொல்வது? அப்படிச் சொல்வதாயிருந்தாலும், அதற்காகத் தலையில் அடிக்கவா வது? சுத்த போக்கிரித்தனம்/ இந்தப் பயலுடைய விமானத் தில் இனி அரைக் கணங்கூட இருப்பதில்லை!' என்று தீர் மானித்து ஆயிரம் அடி உயரத்திலிருந்து நேராகக் கீழே குதித்திருப்பீர்களோ, என்னவோ? இத்தகைய சுயமரியாதை உணர்ச்சி அப்போது எனக்கொன்றும் ஏற்படவில்லை. ஆஹா! கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் பேசுவதற்கு ஓர் ஆள் இருக்கிறானே என்ற உவகைதான் பொங்கிற்று. 'தேக்கா! தேக்கா ! கூப் தேக்கா' என்று விமான எஞ்சின் சத்தத்தை யும் மிஞ்சிய குரலில் கத்தினேன். இரண்டொரு ஹிந்தி வார்த்தைகள் தெரிந்திருந்தது எவ்வளவு சமயத்தில் கை கொடுத்தது பாருங்கள்! அந்தச் சமயத்தில் அந்த வார்த்தை களைமட்டும் நான் பேசியிராவிட்டால் என்னுடைய விமானப் பிரயாணம் இன்பகரமானதாகவே தோன்றியிராது. 'வெறும் பேச்சிலே இவ்வளவு இன்பம் உண்டென்பது உண்மையானால் உலகமெல்லாம் சதா காலமும் இன்பக் கட லில் மூழ்கியல்லவா தத்தளித்துக்கொண் டிருக்க வேண்டும்? அப்படிக் காணோமே?" என்று கேட்கலாம். உலகத்தில் எவ் வளவோ இன்பங்கள் இருக்கின்றன. அவைகளை எல்லோருமே அநுபவிக்கிறார்களா? சங்கீதம் எல்லோருக்கும் ஒரேவித இன்பமளிக்கிறதா? இயற்கைக் காட்சிகளை எல்லோருமே பார்த்து மகிழ்கிறார்களா? நதியில் எல்லோருமே துளைந்துவிடுகிறார்களா? கவிதா ரஸத்தை எல்லோருமே அறிந்து பருகுகிறார்களா? மிளகு ரஸத்தில் உள்ள ருசிகூடச் சிலருக்குக் கவிதா ரஸத்தில் இருப்பதில்லை. எந்த இன்பத்தையும் அனுபவிப்பதற்குப் பயிற்சி வேண்டும். மற்றக் கலைகளைப்போல் சம்பாஷணையும் ஓர் அருங் கலை யாகும். இவ்வுலகில் கருவிலே திருவுடையார் சிலர் உண்டு. இவர்கள் பிறக்கும்போதே கவிவாணர்களாகவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/45&oldid=1721429" இலிருந்து மீள்விக்கப்பட்டது