பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. ஆனந்த ஓவியம் தூக்கணாங் குருவியிலிருந்து துருவ நக்ஷத்திரம்வரையில் சின்னது பெரியது எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுத லாம். எல்லாம் எழுதும் முறையில்தான் இருக்கிறது. 'எழுதி முடித்த பிறகு, நன்றாயிருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி?': தம்பி/ உன்னுடைய கேள்விகள் எல்லாவற்றிலும் இதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எழுதியது நன்றாயிருக்கிறதா. இல்லையா என்று கண்டுபிடிக்க விரும்புகிறாயல்லவா? உன்னைப்போல் எழுதத் தொடங்கும் அநேகருக்கு இந்த யோசனை தோன்றுகிறதேயில்லை. நன்றாயிருக் கிறதா, இல்லையா என்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு பத்திரிகாசிரியருடைது, நமக்கென்ன கவலை அதைப் பற்றி?" என்று அவர்கள் அனைக்கிறார்கள். ஆனால், அந்தத் துர்ப்பாக்கியப்பத்திரிகாசியாகள், ஒரு கட்டுரை நன்றாயிருக் கிறதா, இல்லையா என்று தீர்மானிப்பதற்குள் படும் நரக வேதனையை அவர்கள் பார்த்திருந்தால் அவ்வளவு குரூர மான எண்ணம் எண்ணமாட்டார்கள். நிற்க. . உன் கேள்விக்கு வருகிறேன். நீ எழுதியது நன்றாயிருக் கிறதா, இல்லையா என்பதை ஒருவாறு கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. எழுதியதை உடனே பெட்டிக்குள் வைத்துப் பூட்டுவிடு. ஒரு வாரமோ, ஒரு மாதமோ.ஒரு வருஷமோ எவ்வளவு காலம் உன்னால் பொறுத்திருக்க முடியுமோ, அவ்வளவு நாள் பொறுத்திருந்து, பிறகு அதை எடுத்து நீயே படித்துப் பார். எவ்வளவுக்கெவ்வளவு அதிக நாள் கழித்து எடுத்துப் பார்க்கிறாயோ அவ்வளவுக்கு 'நன்றாய் யிருக்கிறது' அல்லது 'இல்லை' என்பதை நிச்சய மாய்த் தெரிந்துகொள்வாய். வைத்திருந்து பார்ப்பதற்கு வேண்டிய பொறுமை உனக்கு இல்லாவிட்டால் இன்னொரு வழி இருக்கிறது: நீ எழுதியதை உன் மனைவியிடம் வாசித்துக் காட்டு. ("இவளுக்கு என்ன தெரியும்?" என்று அலட்சியமாய் நினைக்க வேண்டாம். 'இவ'ளைப் போன்ற ஜனங்கள்தான் நீ எழுதியதைப் பத்திரிகையில் படித்து மகிழவோ, துக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/51&oldid=1721435" இலிருந்து மீள்விக்கப்பட்டது