பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஆனந்த ஓவியம்" 'கட்டுரைகளுடன் பத்திரிகாசிரியர்களுக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்?'! இது உன் கடைசிக் கேள்வி. கீழே சில நகல் கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். அவைகளில் ஏதேனும் ஒன்றைத் தழுவிக் கடிதம் எழுதலாம்: "இது என் ஆயுளிலேயே நான் முதன் முதலாக எழுதிய கட்டுரை. ஆதலால், இதில் குற்றங்குறைகள் இருந்தாலும் சீர்திருத்தி வெளியிட்டு ஊக்கமளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்." "அன்பீர்! சென்ற முப்பத்திரண்டு வருஷ காலமாய் நான் பல தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விஷய தானம் புரிந்து வந்திருக்கிறேன். என் கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகை. கள் எல்லாம் மாண்டு போயின. நான்மட்டும் உயிரோ டிருக்கிறேன். ஆகையால், இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையைத் தவறாது வெளியிடவும்.' இத்துடன் அனுப்பி இருக்கும் என் கட்டுரை என் னிடம் கைவசம் இருக்கும் 124 கட்டுரைகளில் ஒன்றுதான். தாங்கள் கோரினால் பாக்கி 123-யும் அனுப்பி வைப்பேன்." "என் வாழ்நாளில் ஒரு கட்டுரையாவது எழுதிப் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென்பது என் ஜீவிய மனோரதம். ஆகையால் இக்கட்டுரையை அடுத்த பிப்ரவரி மீ 1s இதழில் அவசியம் வெளியிட்டு என் மனோரதத்தை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். நவரசங்களும் பொங்கித் ததும்புமாறு நான் எழுதி' யுள்ள இந்தச் சிறந்த கட்டுரை தங்கள் பத்திரிகையின் அடுத்த இதழை அலங்கரிக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. 'எளியேன் இத்துடன் அனுப்பியுள்ள சிறு கதையைத் தாங்கள் தயைகூர்ந்து மனமுவந்து அங்கீகரிப்பீர்களாயின், அடியேன் மனமார்ந்த வந்தனம் செலுத்தி மிக்க நன்றியுள்ள வனாயிருப்பேன். ஆனால் நீங்கள் இந்தக் கட்டுரையைப் பிர சுரியாவிடின் அதற்காக நான் ஒரு சிறிதும் வருத்தப்படப் போவதில்லை என்பதைமட்டும் உறுதியாக நம்புங்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/55&oldid=1721439" இலிருந்து மீள்விக்கப்பட்டது