யார் தெரியுமா? நாள்தான்! 59* 'ஆனந்த விகடன் மானேஜர் அவர்களுக்கு, நான் உங்க ளுடைய 17,235 ஆவது சந்தாதார். இந்தக் கட்டுரையை நீங்கள் வெளியிட்டால், என்னுடைய சிநேகிதர்களிடம் சொல்லி, அவர்களையும் சந்தாதாரராகச் செய்வேன்." "ஐயா! நான் ஒரு ஹரிஜனன். உங்கள் பத்திரிகை ஹரிஜனங்களுக்காகப் பாடுபடுவது உண்மையானால், நான் அனுப்பி இருக்கும் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க வேண் டியது. இல்லாவிட்டால் உங்களுடைய குட்டு வெளியாகி விடும்!" "தாங்கள் பெரிய மனது செய்து இக் கட்டுரையை வெளியிட்டால், அந்த நன்றியை மறவாமல் ஏதோ எனக் குத் தெரிந்தவரை ஒவ்வோர் இதழுக்கும் ஏதாவது அனுப்ப முயல்வேன். "எமது அரும் பெரும் பொருள் பொதிந்த கட்டுரை களைத் தாங்கி வெளிவரும் தகுதி நும் திங்கள் இரு முறை விகடத் தாளுக்கு இல்லை என்பதை நன்கு அறிவோமா யினும்,நுண்ணறிவில்லாத மாக்களுக்குத் தமிழ்மொழியின் அரும்பெருஞ் சிறப்பை அறிவுறுத்துவான் வேண்டி கட்டுரை வரைந்து அனுப்பலுற்றோம். வீராக. .. தம்பி! மேற்கண்ட இக் வெளியிட்டு உய் கடித வகைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி எழுதலாம். ஆனால், ஒரு விஷயம்: னுடைய கட்டுரை விஷயத்தில் உனக்குத் தயக்கம் திருந்து, அது வெளிவராமல் போனால் நல்லது என்று நினைத் ருந்து,அது தாயானால்தான் மேற்கண்ட வகைகளில் கடிதம் எழுத வேண்டும். அத்தகைய கடிதத்துடன் போகும் கட்டுரை மனிதர் கண்காணாத இடத்தை அடையும் என்று நூற்றுக் குத் தொண்ணூற்று ஒன்பது பங்கு நீ எதிர்பார்க்கலாம். நீ ஆனால், பத்திரிகாசிரியர் உன் கட்டுரையை உடனே பார்த் துப் பிரசுரிக்க வேண்டுமென்று விரும்பினால், கடிதம் ஒன்றும் எழுதாதே. கட்டுரையின் தலைப்பில் உன் முழு விலாசத்தை யும் எழுதி, அரை அணாச் செலவில் புக்போஸ்டில் அனுப்பி னால் போதுமானது. ஏனென்றால், மற்ற மனிதர்கள்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை