பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த ஓவியம் 100 மார்க்கு வாங்குவாய் என்பதில் என்பதில் எனக்குச் சந்தேக மில்லை. அரசியல் - பொது 1.கேள்வி: அரசாங்கம் என்றால் என்ன? அதன் பெருமை யாது? பதில்: ஒரு தேசத்தின் ஜனங்களிடம் அதிகமாகப் பணம் தங்கி அதனால் அவர்கள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும் ஸ்தாபனத்திற்கு அரசாங்கம் என்று பெயர். திருடர்கள் என்ற ஒரு கூட்டத்தாரும் இதே காரியத்தைச் செய்து வருகிறார்கள். இவர்களுடைய போட்டியை அடி யோடு ஒழித்துத் தாங்களே ஏகபோகமாய் அவ்வுரிமையை அநுபவிப்பதுதான் அரசாங்கத்தின் பெருமை. 3 2. கேள்வி: பிரஜைகள் என்றால் என்றால் யார்? இவர்க ளுடைய இயல்பு என்ன? பதில்: அரசாங்கத்திற்கு வரி கொடுப்பதற்காக ஏற் பட்ட பிராணிகளுக்குப் பிரஜைகள் என்று பெயர். ஓயாமல் ஏதாவது ஒரு காரணத்திற்காக மூக்கால் அழுதுகொண்டே யிருப்பது இவர்களுடைய இயல்பு. தங்களுக்கு என்ன குறைகள் நேர்ந்தாலும் அவைகளுக்கெல்லாம் காரணம் அரசாங்கந்தான் என்று சொல்லுவதும் இவர்கள் வழக்கம் மொத்தத்தில், சுயபுத்தி இல்லாதவர்கள். 3. கேள்வி: ஜனநாயகம் என்றால் என்ன? அதைப் பற்றி உனக்குத் தெரிந்ததை எழுதுக. பதில்: இது ஜனங்களைப் பீடிக்கும் ஒருவிதக் கொடிய வியாதி.ஸூயஸ் கால்வாய்க்கு மேற்கே உள்ள ஜனங் களுக்கு இந்த நோய் வந்தால் அதிகத் தீமை விளையாது. அதற்குக் கிழக்கே உள்ள நாடுகளில் முக்கியமாக, இந்தியா தேசத்தில் உள்ள ஜனங்களுக்கு இந்த நோய் வந்துவிட்டால் பிழைப்பது அரிது. ஆகையால் அரசாங்கங்கள் இந்த விஷ யத்தில் சர்வ ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். . இந்திய அரசியல் 4. கேள்வி: இந்தியா தேசத்தின் முக்கியமான சிறப்பு யாது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/59&oldid=1721443" இலிருந்து மீள்விக்கப்பட்டது