அரசியல் பரீட்சை 63 பதில்: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கிரீடத்தில் ஒளி சிறந்த இரத்தினமாகத் திகழ்வதுதான் இந்தியாவின் அரும் பெருஞ் சிறப்பாகும். 5 கேள்வி: இந்தியாவில் வாழும் ஜனங்களையும், வாழ்வு முறையையும்பற்றி உனக்குத் அவர்களுடைய தெரிந்தவைகளை எழுது. பதில்: இந்தியாவின் ஜனங்கள் காட்டுமிராண்டிக ளாகவும், நாகரிகமற்றவர்களாகவும் வெகு காலம் வாழ்ந்து வந்தனர். சென்ற 150 வருஷ காலமாக அவர்கள் நாகரிக மடையத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் ஆயிரம் வரு ஷங்களுக்குள் அவர்கள் ஒருவாறு நாகரிகம் அடைந்து விடலாம். 6. கேள்வி: இந்தியாவின் அரசியல் சரித்திரத்தில் மிக முக்கியமான வருஷம் எது? ஏன்? பதில்: 1757ஆம் வருஷம். பிளாஸி சண்டை அவ் வருஷத்தில்தான் நடந்தது. அந்தச் சண்டையில் 30,000 முரட்டுக் கறுப்பு மனிதர்களை 300 வெள்ளை வீரர்கள் எதிர்த் துப் பராக்கிரமச் செயல்கள் பல புரிந்து புறமுதுகிட்டோடச் செய்து வெற்றிக் கொடி நாட்டினார்கள். 7. கேள்வி : பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னால் இந்தியாவின் நிலைமையையும், அதற்குப் பிறகு இந்தியாவின் நிலைமையையும் ஒப்பிடுக. முக்கியமான வித்தியாசம் என்ன? பதில் : பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னால் இந்தியாவில் திருடர் பயம் அதிகமாயிருந்தது. மராட்டியர்கள், தக்கர் கள். பிண்டாரிகள் முதலிய கொள்ளைக்கூட்டத்தார் ஜனங் களுடைய பொருள்களைக் கொள்ளையடித்துக்கொண் டிருந் தார்கள். இப்போது அத்தகைய பயம் அறவே கிடையாது. ஏனெனில், ஜனங்களிடம் திருடுவதற்கோ, கொள்ளையடிப்ப தற்கோ பணம் ஒன்றுமில்லை. 8. கேள்வி : இந்திய சரித்திரத்தில் சில வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடுக. பதில் : அலெக்ஸாண்டர்,கிளைவ்,ஜெனரல் டையர்.
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை